Friday, December 25, 2015

Ulagalantha Perumal Temple, Thirukovilur – Literary Mention

Ulagalantha Perumal Temple, Thirukovilur – Literary Mention

The temple finds mention in Sangam literature in Tamil from 3rd BC to 3rd centuries CE. Akananuru, Purananuru, Natrinai and Kurunthokai have mention about the temple. Vaishnavite Azhwars Poigai Azhwar, Bhoothatazhwar, Pey Azhwar and Thirumangai Azhwar had sung the glory of Lord Trivikrama in their celebrated hymns of Nalayira Divya Prabandham. This temple is said to be the place where the great canon Nalayira Divya Prabandham got initiated by the Azhwars.

The temple plays a special part in Vaishnavism as it is where the first three Azhwars sang the first three Thiruvandadhis compiled in Nalayira Divya Prabandham, the Vaishnava canon. Thirumangai Azhwar, another Azhwar saint also revered the deity in his verses compiled in Nalayira Divya Prabandham. Thirumangai Alwar, who generally praises only the Lord in his hymns, had glorified Mother Durga in one of his verses. The great Vaishnava acharya, Manavala Mamunigal, also had rendered many hymns in praise of Lord Ulagalantha Perumal.

Thirumangai Alwar Hymns:

1078:

அன்றாயர்கு லக்கொடி யோடணிமா

மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க்

கென்றானு மிரக்கமி லாதவனுக்குக்

குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ்

நன்றாயபு னல்நறை யூர்த்திருவா

லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,

நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற்

கிடம்மாமலை யாவது நீர்மலையே.

1138 – 1147:

மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும்

வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,

எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர்

இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,

துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்

தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,

செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. – 1138

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்

தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில்,

சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை

தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,

வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து

வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,

சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. – 1139

கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்

கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி,

அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி

அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,

எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட

இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட,

செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. – 1140

தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து

தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை,

ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும்

அடியவர்கட் காரமுத மானான் றன்னை,

கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்

குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு

தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. – 1141

கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி

கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள்,

பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம்

பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை,

மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும்

மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத,

சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. – 1142

உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங்

குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க,

தறியார்ந்த கருங்களிறே போல நின்று

தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை,

வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு,

வியன்கலையெண் தோளினாள் விளங்கு, செல்வச்

செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. – 1143

இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி

இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து,

வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு

வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை,

கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று

காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட,

செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள்சோலைத்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. – 1144

பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு

பாரதத்துத் தூதியங்கி, பார்த்தன் செல்வத்

தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை

செருக்களத்துத் திறலழியச் செற்றான்றன்னை,

போரேறொன் றுடையானு மளகைக் கோனும்

புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்,

சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. – 1145

தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு

சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,

காவடிவின் கற்பகமே போல நின்று

கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,

சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை

செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,

தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. – 1146

வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல

மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை,

சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்

திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று

வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்

வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,

காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக்

கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. – 1147

1569:

தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும்

தன்னை யேநினைக் கச்செய்து,தானெனக்

காய்நி னைந்தருள் செய்யு மப்பனை

அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட

வாய னை,மக ரக்குழைக் காதனை

மைந்த னைமதிள் கோவ லிடைகழி

யாயனை,அம ரர்க்கரி யேற்றையென்

அன்ப னையன்றி யாதரி யேனே

1641:

பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத்

தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை,

மாய னைமதிள் கோவலி டைகழி

மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள்

ஈச னை,இலங் கும்சுடர்ச் சோதியை

எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை

காசி னைமணி யைச்சென்று நாடிக்

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

2057:

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்

அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,

சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன்

தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,

நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த

நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,

புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப்

பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.

2058:

வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள

வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,

வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த

வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,

கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட

கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,

பொற்புடைய மலையரையன் பணிய நின்ற

பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.

2068:

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப்

பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று

செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்

சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித்

தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,

நங்காய்.நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன

நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.

2673 (69):

காரார் திருமேனி காணுமலவும்போஇ

சீரார் திருவே-ண்கடமே திருக்கொவல்

Poigai Azhwar Hymns:

2158:

வேங்கடமும் விண்ணகரும் வெகாவும், அகாத

பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்

நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,

என்றால் கெடுமாம் இடர்.

2167:

நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்

பாயும் பனிமறைத்த பண்பாளா, - வாயில்

கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்

இடைகழியே பற்றி யினி.

Bhoothatazhwar Hymns:

2251:

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,

தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்

மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,

ஏவல்ல எந்தைக் கிடம்.

Pey Azhvaar Hymns:

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்

செருகிலரும் பொன்னாழி கண்டேன்

புரிசங்கம் கை கண்டேன்

என்னாழி வண்ணன் பால் இன்று