Pages

Friday, December 23, 2016

Needur Somanathaswami Temple – Literary Mention

Needur Somanathaswami Temple – Literary Mention
Tirunavukkarasar describes the feature of the deity of Tirupunkur and Tiruneedur as:
கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக் கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப் புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்
செய்யலலெஞ் செழுங்கமலப் பழன வேலித் திருப்புன்கூர்மே விய சிவலோ கனை
நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை நீதனேன்எ ன்னேநான் நினையாவாறே.
Thirumurai 7.56 திருநீடூர்
பண்  தக்கேசி
திருச்சிற்றம்பலம்
சுவாமிபெயர் - சோமநாதேசுவரர்
தேவியார் - வேயுறுதோளியம்மை.
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
ஒண்ணு தற்றனிக் கண்ணுத லானைக்
கார தார்கறை மாமிற் றானைக்
கருத லார்புரம் மூன்றெரித் தானை
நீரில் வாளைவ ரால்குதி கொள்ளும்
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
பாரு ளார்பர வித்தொழ நின்ற
பரம னைப்பணி யாவிட லாமே.
7.056.1
எருது ஒன்றினை ஓர் ஊர்தியாக உடையவனும், ஒளியையுடைய நெற்றியையுடைய ஒப்பற்ற சிவபெருமானும், கருமை பொருந்திய நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும், பகைவரது ஊர்கள் மூன்றை எரித்தவனும் ஆகிய, நீரில் வாழ்வனவாகிய வாளை மீனும், வரால் மீனும் குதிகொள்ளுகின்ற நிறைந்த நீரையுடைய கழனிகளை யுடைய செல்வம் பொருந்திய திருநீடூரின்கண், நிலவுலகில் உள்ளார் யாவரும் துதித்து வணங்குமாறு எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

துன்னு வார்சடைத் தூமதி யானைத்
துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
பன்னு நான்மறை பாடவல் லானைப்
பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
என்னை இன்னருள் எய்துவிப் பானை
ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
புனித னைப்பணி யாவிட லாமே.
7.056.2

நெருங்கிய நீண்ட சடையின்கண் தூய்தாகிய பிறையைச் சூடினவனும், மயக்கம் வாராதவாறு உய்யும் நெறியைக் காட்டுகின்றவனும், உயர்ந்தோர் ஓதும் நான்கு வேதங்களைச் செய்ய வல்லவனும், அருச்சுனனுக்கு அருள் புரிந்த தலைவனும், அவ்வினிய அருளை என்னை எய்துவிப்பவனும், அயலாய் நிற்பார்க்கு அயலாய் நிற்பவனும் ஆகிய, புன்னையும் குருக்கத்தியும் அரும்புகள் மலர்கின்ற திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

கொல்லு மூவிலை வேலுடை யானைக்
கொடிய காலனை யுங்குமைத் தானை
நல்ல வாநெறி காட்டுவிப் பானை
நாளு நாமுகக் கின்றபி ரானை
அல்ல வில்லரு ளேபுரி வானை
ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக்
கூறி நாம்பணி யாவிட லாமே.
7.056.3

கொல்லுதற் கருவியாகிய சூலத்தை உடையவனும், கொடிய இயமனையும் அழித்தவனும், நல்லனவாகிய நெறிகளையே காட்டுவிக்கின்றவனும், எந்நாளும் நாம் விரும்புகின்ற தலைவனும், துன்பம் இல்லாத திருவருளைச் செய்பவனும் ஆகிய, முழுகுதற்குரிய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

தோடு காதிடு தூநெறி யானைத்
தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப்
பாடு மாமறை பாடவல் லானைப்
பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமொ டாட
அலையு னற்கழ னித்திரு நீடூர்
வேட னாயபி ரானவன் றன்னை
விரும்பி நாம்பணி யாவிட லாமே.
7.056.4

தோட்டைக் காதிலே இட்ட, தூய நெறியாய் உள்ளவனும், உயிர்கட்குப் பிறப்பும் இறப்புமாய் நிற்பவனும், இசையொடு பாடுதற்குரிய சிறந்த வேதத்தைச் செய்ய வல்லவனும் ஆகிய, பசிய சோலைகளில் குயில்கள் கூவ, அவ்விடத்தே, ஆடுந் தன்மையுடைய சிறந்த மயில் அன்னத்துடன் நின்று ஆட அலைகின்ற நீரையுடைய வயல்களையுடைய திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, நாம் விரும்பி வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

குற்ற மொன்றடி யாரில ரானாற்
கூடு மாறுத னைக்கொடுப் பானைக
கற்ற கல்வியி லும்மினி யானைக்
காணப் பேணு மவர்க்கௌ யானை
முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை
மூவ ரின்முத லாயவன் றன்னைச்
சுற்று நீர்வயல் சூழ்திரு நீடூர்த்
தோன்ற லைப்பணி யாவிட லாமே.
7.056.5

அடியவர் குற்றம் சிறிதும் இலராயினாரெனின், அவர்கள் அடையுமாறு தன்னையே கொடுப்பவனும், வருந்திக் கற்ற கல்வியினும் மேலாக இனிமையைச் செய்கின்றவனும், ஐம்புலன்களையும் முற்றத்துறந்து பற்றின்றி இருப்பவனும், காரணக் கடவுளர் மூவருள் முதல்வனாயினவனும் ஆகிய, சுற்றிலும் நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால் அங்குச் சென்று அவனைவணங்குவோம்.

காடி லாடிய கண்ணுத லானைக்
கால னைக்கடிந் திட்டபி ரானைப்
பாடியா டும்பரி சேபுரிந் தானைப்
பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்
தேடி மாலயன் காண்பரி யானைச்
சித்த முந்தௌ வார்க்கௌ யானைக்
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்
கூத்த னைப்பணி யாவிட லாமே.
7.056.6

காட்டில் ஆடுகின்ற, கண்ணையுடைய நெற்றியை யுடையவனும், கூற்றுவனை அழித்த தலைவனும், அன்பினால் பாடி ஆடுகின்ற செயலையே விரும்புபவனும், பொருட்சார்புகளையும் உயிர்ச்சார்புகளையும் நீக்குபவனும், மாலும் அயனும் தேடிக் காணுதற்கு அரியவனும், சொல்லாலன்றி, உள்ளத்தாலும் தன்னைத் தௌந்தவர்க்கு எளியவனும் ஆகிய, அளவற்ற தேவர்கள் தொழுகின்ற, திருநீடூரின்கண் எழுந்தருளியுள்ள இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

விட்டி லங்கெரி யார்கையி னானை
வீடி லாத வியன்புக ழானைக்
கட்டு வாங்கந் தரித்தபி ரானைக்
காதி லார்கன கக்குழை யானை
விட்டி லங்குபுரி நூலுடை யானை
வீந்த வர்தலை யோடுகை யானைக்
கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க்
கண்டு நாம்பணி யாவிட லாமே.
7.056.7

கவைவிட்டு விளங்குகின்ற தீப்பொருந்திய கையை யுடையவனும், அழியாத, பரந்த புகழையுடையவனும், மழுவை ஏந்திய தலைவனும், காதின்கண் பொருந்திய பொற்குழையை யுடையவனும், மார்பின்கண் எடுத்து விடப்பட்டு விளங்குன்ற முப்புரி நூலை உடையவனும், இறந்தவரது தலையோட்டைக் கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவனை. நாம் கட்டியைத் தரும் கரும்புகள் வளர்ந்துள்ள திருநீடுரின்கண் கண்டு வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், நாம் அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

மாய மாய மனங்கெடுப் பானை
மனத்து ளேமதி யாயிருப் பானைக்
காய மாயமு மாக்குவிப் பானைக்
காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
ஓயு மாறுறு நோய்புணர்ப் பானை
ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
வேய்கொள் தோளுமை பாகனை நீடூ
வேந்த னைப்பணி யாவிட லாமே.
7.056.8

நிலையில்லாத பொருள்கள் மேற்செல்லுகின்ற மனத்தோடு ஒற்றித்து நின்று அதன்வழியே செல்லும் அறிவாய் இருப்பவனும், பின்னர் அம்மனத்தின் செயலைக்கெடுத்து அறிவை ஒரு நெறிப்படுத்துபவனும், காற்றும் தீயும் முதலிய கருவிகளாய் நின்று உடம்பாகிய காரியத்தைப் பண்ணுவிப்பவனும், பின்னர் அதனை அழிப்பவனும் உயிர்கள் வருந்துமாறு, அவற்றை அடையற் பாலனவாகிய வினைப்பயன்களைக் கூட்டுவிக்கின்றவனும், பின்னர் விரைவில் அவ்வினைகளை அழிப்பவனும், இவை எல்லாவற்றையும் செய்தற்கு மூங்கில் போலும் தோள்களையுடைய உமையைத் துணையாகக் கொள்பவனும் ஆகிய, திருநீடூரின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்
காணப் பேணு மவர்க்கௌயானைத்
தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்
துன்ப முந்துறந் தின்பினி யானைப்
பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்
பாக மாமதி யானவன் றன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
கேண்மை யாற்பணி யாவிட லாமே.
7.056.9

கண்டத்தைக் கறுப்பாகவும் செய்து கொண்ட தலைவனும், தன்னைக் காண விரும்பும் அடியார்களுக்கு எளியவனும் தனக்குத் தொண்டு பூண்டவரைப் பெரிதும் விரும்புபவனும், துன்பம் இல்லாத இன்பத்தைத் தரும் இனியவனும், பழைய வலிய வினைகளையெல்லாம் அழிப்பவனும், பகுதிப் பட்ட சந்திரனுக்குக் களைகண் ஆயினவனும் ஆகிய இறைவனை, நாம் கெண்டை மீன்களும், வாளைமீன்களும் துள்ளுகின்ற நீரையுடைய திருநீடூரின்கண் கேண்மையோடு வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

அல்ல லுள்ளன தீர்த்திடு வானை
அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்
கொல்லை வல்லர வம்மசைத் தானைக்
கோல மார்கரி யின்னுரி யானை
நல்ல வர்க்கணி யானவன் றன்னை
நானுங் காதல்செய் கின்றபி ரானை
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்
ஏத்தி நாம்பணி யாவிட லாமே.
7.056.10

'
துன்பம்' எனப்படுவனவற்றைப் போக்குகின்றவனும், தன்னை அடைந்தவர்கட்கு அமுதம் போன்று பயன் தருபவனும், கொல்லுதலையுடைய வலிய பாம்பைக் கட்டியிருப்பவனும், அழகு பொருந்திய யானையின் தோலையுடையவனும், நன்னெறியில் நிற்பவர்கட்கு அணிகலமாய்த் திகழ்பவனும், அடியேனும் விரும்புகின்ற தலைவனும் ஆகிய இறைவனை, நாம், இரவில் மல்லிகை மலர்கள் மிகவும் மணம் வீசுகின்ற திருநீடூரின் கண் துதித்து வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

பேரோ ராயிர மும்முடை யானைப்
பேசி னாற்பெரி தும்மினி யானை
நீரூர் வார்வடை நின்மலன் றன்னை
நீடூர் நின்றுகந் திட்டபி ரானை
ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்
ஆத த்தழைத் திட்டஇம் மாலை
பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.
7.056.11

எல்லாப் பெயர்களையும் உடையவனும், வாயாற் பேசும்வழி பெரிதும் இனிப்பவனும், நீர் ததும்புகின்ற நீண்ட சடையினையுடைய தூயவனும் ஆகிய, திருநீடூரை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, அவன் திருவடியைக்கண்டு வணங்குதற்கு அன்போடு விரும்பி, நம்பியாரூரன் அனைவரையும் அழைத்துப் பாடிய இத்தமிழ்மாலையால், நிலவுலகத்து உள்ள எவ்வூரின்கண்ணும் இறைவனைப் பாடி வணங்க வல்லவர், அவனுக்கு அடியவராகி, முத்தியைப் பெறுவார்கள்.