Pages

Friday, August 23, 2019

Naganathaswamy Temple (Rahu Sthalam), Tirunageswaram – Literary Mention

Naganathaswamy Temple (Rahu Sthalam), Tirunageswaram – Literary Mention
The Temple is revered in the 7th century Tamil Saiva canonical work, the Thevaram, written by Tamil saint poets known as the Nayanmars and classified as Paadal Petra Sthalam. This is the 146th Paadal Petra Shiva sthalam and 29th sthalam on the south side of river Cauvery. This is one of the 44 Paadal Petra Sthalams where the “Moovar” (the three saints - Saint Thirugnanasambanthar, Saint Tirunavukkarasar (Appar) and Saint Sundaramurthy (Sundarar) had rendered their Pathigams. Saint Arunagirinathar had praised Lord Murugan of this temple in his revered Thirupugazh Hymns. The Thirunagechurappuranam which was written by Singaravelu Pillai contains sufficient information about the temple.
In his Thevaram verse, Thiru Gnana Sambandar refers repeatedly to this place as Thiru Nageswaram, one where devotees throng in large numbers to perform pooja and present the Lord with gifts. In one of the verses he refers to the place as Nageswara Nagar referring to the overflowing Cauvery and bountiful crops. Sundarar refers to the happy people living in this place that has extensive paddy fields. He says that devotees express their thanks every day to the Lord for providing such rousing crops year on year. 
Sambandar (02.024):
பொன்நேர் தருமே
னியனே புரியும்
மின்நேர் சடையாய்
விரைகா விரியின்
நன்னீர் வயல்நா
கேச்சர நகரின்
மன்னே யெனவல்
வினைமாய்ந் தறுமே.  1
சிறவார் புரமூன்
றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த்
தவனே உயரும்
நறவார் பொழில்நா
கேச்சர நகருள்
அறவா எனவல்
வினையா சறுமே.  2
கல்லால் நிழல்மே
யவனே கரும்பின்
வில்லான் எழில்வே
வவிழித் தவனே
நல்லார் தொழுநா
கேச்சர நகரில்
செல்வா எனவல்
வினைதேய்ந் தறுமே.  3
நகுவான் மதியோ
டரவும் புனலும்
தகுவார் சடையின்
முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா
கேச்சர நகருள்
பகவா எனவல்
வினைபற் றறுமே.  4
கலைமான் மறியுங்
கனலும் மழுவும்
நிலையா கியகை
யினனே நிகழும்
நலமா கியநா
கேச்சர நகருள்
தலைவா எனவல்
வினைதான் அறுமே.  5
குரையார் கழலா
டநடங் குலவி
வரையான் மகள்கா
ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே
றுநாகேச் சரத்தெம்
அரைசே எனநீங்
கும்அருந் துயரே.  6
முடையார் தருவெண்
டலைகொண் டுலகில்
கடையார் பலிகொண்
டுழல்கா ரணனே
நடையார் தருநா
கேச்சர நகருள்
சடையா எனவல்
வினைதான் அறுமே.  7
ஓயா தஅரக்
கன்ஒடிந் தலற
நீயா ரருள்செய்
துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத்
துவர்நா கேச்சரத்
தாயே எனவல்
வினைதான் அறுமே.  8
நெடியா னொடுநான்
முகன்நே டலுறச்
சுடுமா லெரியாய்
நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா
கேச்சர நகரே
இடமா வுறைவா
யெனஇன் புறுமே.  9
மலம்பா வியகை
யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட்
டுரைவிட் டுலகில்
நீலம்பா வியநா
கேச்சர நகருள்
சிலம்பா எனத்தீ
வினைதேய்ந் தறுமே.  10
கலமார் கடல்சூழ்
தருகா ழியர்கோன்
தலமார் தருசெந்
தமிழின் விரகன்
நலமார் தருநா
கேச்சரத் தரனைச்
சொலமா லைகள்சொல்
லநிலா வினையே.
Sambandar (02.119):
தழைகொள்சந் தும்மகி லும்மயிற்
பீலியுஞ் சாதியின்
பழமும்உந் திப்புனல் பாய்பழங்
காவிரித் தென்கரை
நழுவில்வா னோர்தொழ நல்குசீர்
மல்குநா கேச்சரத்
தழகர்பா தந்தொழு தேத்தவல்
லார்க்கழ காகுமே.  1
பெண்ணொர்பா கம்மடை யச்சடை
யிற்புனல் பேணிய
வண்ணமா னபெரு மான்மரு
வும்மிடம் மண்ணுளார்
நண்ணிநா ளுந்தொழு தேத்திநன்
கெய்துநா கேச்சரம்
கண்ணினாற் காணவல் லாரவர்
கண்ணுடை யார்களே.  2
குறவர்கொல் லைப்புனங்
கொள்ளைகொண் டும்மணி குலவுநீர்
பறவையா லப்பரக் கும்பழங்
காவிரித் தென்கரை
நறவநா றும்பொழில் சூழ்ந்தழ
காயநா கேச்சரத்
திறைவர்பா தந்தொழு தேத்தவல்
லார்க்கிட ரில்லையே.  3
கூசநோக் காதுமுன் சொன்னபொய்
கொடுவினை குற்றமும்
நாசமாக் கும்மனத் தார்கள்வந்
தாடுநா கேச்சரம்
தேசமாக் கும்திருக் கோயிலாக்
கொண்டசெல் வன்கழல்
நேசமாக் குந்திறத் தார்அறத்
தார்நெறிப் பாலரே.  4
வம்புநா றும்மல ரும்மலைப்
பண்டமுங் கொண்டுநீர்
பைம்பொன்வா ரிக்கொழிக்
கும்பழங் காவிரித் தென்கரை
நம்பன்நா ளும்அமர் கின்றநா
கேச்சரம் நண்ணுவார்
உம்பர்வா னோர்தொழச் சென்றுட
னாவதும் உண்மையே.  5
காளமே கந்நிறக் காலனோ
டந்தகன் கருடனும்
நீளமாய் நின்றெய்த காமனும்
பட்டன நினைவுறின்
நாளுநா தன்அமர் கின்றநா
கேச்சரம் நண்ணுவார்
கோளுநா ளுந்தீய வேனும்நன்
காங்குறிக் கொண்மினே.  6
வேயுதிர் முத்தொடு மத்தயா
னைமருப் பும்விராய்ப்
பாய்புனல் வந்தலைக் கும்பழங்
காவிரித் தென்கரை
நாயிறுந் திங்களுங் கூடிவந்
தாடுநா கேச்சரம்
மேயவன் றன்அடி போற்றியென்
பார்வினை வீடுமே.  7
இலங்கைவேந் தன்சிரம் பத்திரட்
டியெழில் தோள்களும்
மலங்கிவீ ழம்மலை யால்அடர்த்
தானிட மல்கிய
நலங்கொள்சிந் தையவர் நாடொறும்
நண்ணும்நா கேச்சரம்
வலங்கொள்சிந் தையுடை யார்இட
ராயின மாயுமே.  8
கரியமா லும்அய னும்மடி
யும்முடி காண்பொணா
எரியதா கிந்நிமிர்ந் தான்அம
ரும்மிட மீண்டுகா
விரியின்நீர் வந்தலைக் குங்கரை
மேவுநா கேச்சரம்
பிரிவிலா தவ்வடி யார்கள்வா
னிற்பிரி யார்களே.  9
தட்டிடுக் கியுறி தூக்கிய
கையினர் சாக்கியர்
கட்டுரைக் கும்மொழி கொள்ளலும்
வெள்ளிலங் காட்டிடை
நட்டிருட் கண்நட மாடிய
நாதன்நா கேச்சரம்
மட்டிருக் கும்மல ரிட்டடி
வீழ்வது வாய்மையே.  10
கந்தநா றும்புனற் காவிரித்
தென்கரை கண்ணுதல்
நந்திசே ருந்திரு நாகேச்ச
ரத்தின்மேன் ஞானசம்
பந்தன்நா விற்பனு வல்லிவை
பத்தும்வல் லார்கள்போய்
எந்தையீ சன்னிருக் கும்முல
கெய்தவல் லார்களே.  11
Tirunavukkarasar (04.066):
கச்சைசேர் அரவர் போலுங்
கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும்
பேரரு ளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி
இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும்
நாகஈச் சரவ னாரே.  1
வேடுறு வேட ராகி
விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங்
கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந்
தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும்
நாகஈச் சரவ னாரே.  2
கற்றுணை வில்ல தாகக்
கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும்
புலியத ளுடையார் போலுஞ்
சொற்றுணை மாலை கொண்டு
தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை யாவர் போலும்
நாகஈச் சரவ னாரே.  3
கொம்பனாள் பாகர் போலுங்
கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனா ருருவர் போலுந்
திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும்
இறைவனே என்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும்
நாகஈச் சரவ னாரே.  4
கடகரி யுரியர் போலுங்
கனல்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும்
பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக்
கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும்
நாகஈச் சரவ னாரே.  5
பிறையுறு சடையர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும்
மால்மறை யவன்ற னோடு
முறைமுறை அமரர் கூடி
முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும்
நாகஈச் சரவ னாரே.  6
வஞ்சகர்க் கரியர் போலும்
மருவினோர்க் கெளியர் போலுங்
குஞ்சரத் துரியர் போலுங்
கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று
வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும்
நாகஈச் சரவ னாரே.  7
போகமார் மோடி கொங்கை
புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும்
வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்
பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்
நாகஈச் சரவ னாரே.  8
கொக்கரை தாளம் வீணை
பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்
ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்
மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும்
நாகஈச் சரவ னாரே.  9
வின்மையாற் புரங்கள் மூன்றும்
வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள்
தலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான்
வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும்
நாகஈச் சரவ னாரே.
Tirunavukkarasar (05.052):
நல்லர் நல்லதோர்
நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை
தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை
யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு
நாகேச் சரவரே.  1
நாவ லம்பெருந்
தீவினில் வாழ்பவர்
மேவி வந்து
வணங்கி வினையொடு
பாவ மாயின
பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு
நாகேச் சரவரே.  2
ஓத மார்கட
லின்விட முண்டவர்
ஆதி யார்அய
னோடம ரர்க்கெலாம்
மாதொர் கூறர்
மழுவல னேந்திய
நாதர் போல்திரு
நாகேச் சரவரே.  3
சந்தி ரன்னொடு
சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி
பாடுகள் செய்தபின்
ஐந்த லையர
வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி
நாகேச் சரவரே.  4
பண்டோர் நாளிகழ்
வான்பழித் தக்கனார்
கொண்ட வேள்விக்
குமண்டை யதுகெடத்
தண்ட மாவிதா
தாவின் றலைகொண்ட
செண்டர் போல்திரு
நாகேச் சரவரே.  5
வம்பு பூங்குழல்
மாது மறுகவோர்
கம்ப யானை
யுரித்த கரத்தினர்
செம்பொ னாரித
ழிம்மலர்ச் செஞ்சடை
நம்பர் போல்திரு
நாகேச் சரவரே.  6
மானை யேந்திய
கையினர் மையறு
ஞானச் சோதியர்
ஆதியர் நாமந்தான்
ஆன அஞ்செழுத்
தோதவந் தண்ணிக்குந்
தேனர் போல்திரு
நாகேச் சரவரே.  7
கழல்கொள் காலினர்
காலனைக் காய்ந்தவர்
தழல்கொள் மேனியர்
சாந்தவெண் ணீறணி
அழகர் ஆல்நிழற்
கீழற மோதிய
குழகர் போல்குளிர்
நாகேச் சரவரே.  8
வட்ட மாமதில்
மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கைய
ராகிலுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை
தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் போல்திரு
நாகேச் சரவரே.  9
தூர்த்தன் றோண்முடி
தாளுந் தொலையவே
சேர்த்தி னார்திருப்
பாதத் தொருவிரல்
ஆர்த்து வந்துல
கத்தவ ராடிடுந்
தீர்த்தர் போல்திரு
நாகேச் சரவரே.
Tirunavukkarasar (06.066):
 தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்
தலையவனை மலையவனை உலக மெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.  1
உரித்தானை மதவேழந் தன்னை மின்னார்
ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்
தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.  2
ரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர்தம் மனத்து ளானை
மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத
ஏரானை இமையவர்தம் பெருமான் றன்னை
இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க
சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.  3
தலையானை எவ்வுலகுந் தானா னானைத்
தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணா
நிலையானை நேசர்க்கு நேசன் றன்னை
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
மலையானை வரியரவு நாணாக் கோத்து
வல்லசுரர் புரமூன்று மடிய வெய்த
சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.  4
மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு
விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும்
பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்
பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்
பையானைப் பையரவ மசைத்தான் றன்னைப்
பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச்
செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.  5
துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்
தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த
நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி
நிற்பனவும் நடப்பனவு மாயி னானை
மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை
அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ்
சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.  6
மறையானை மால்விடையொன் றூர்தி யானை
மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்
இறையானை என்பிறவித் துயர்தீர்ப் பானை
இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்
உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம்
என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த
சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.  7
எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்
இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப்
பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப்
பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்
கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்
குறியிலாக் கொடியேனை அடியே னாகச்
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.  8
அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை
வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச்
சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்
கெளியானை யாவர்க்கு மரியான் றன்னை
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறற்
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.  9
சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்றச்
சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப்
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்
பனிமதியஞ் சடையானைப் புனிதன் றன்னை
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச
அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந்
தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.  10
Sundarar (07.099):
பிறையணி வாணுதலாள்
உமையாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங்க
நீலமால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல்லை
அளைந்துகுளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள்சேர்
திருநாகேச் சரத்தானே.  1
அருந்தவ மாமுனிவர்க்
கருளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரிதற்
கியல்பாகிய தென்னைகொலாம்
குருந்தய லேகுரவம்
அரவின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மலருந்
திருநாகேச் சரத்தானே.  2
பாலன தாருயிர் மேற்
பரியாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக்
கருத்தாக்கிய தென்னைகொலாம்
கோல மலர்க்குவளைக்
கழுநீர்வயல் சூழ்கிடங்கில்
சேலொடு வாளைகள்பாய்
திருநாகேச் சரத்தானே.  3
குன்ற மலைக்குமரி
கொடியேரிடை யாள்வெருவ
வென்றி மதகரியின்
உரிபோர்த்ததும் என்னைகொலாம்
முன்றில் இளங்கமுகின்
முதுபாளை மதுவளைந்து
தென்றல் புகுந்துலவுந்
திருநாகேச் சரத்தானே.  4
அரைவிரி கோவணத்தோ
டரவார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத்தன்
றுகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணியும்
வரைச்சந்தகி லோடும்உந்தித்
திரைபொரு தண்பழனத்
திருநாகேச் சரத்தானே.  5
தங்கிய மாதவத்தின்
தழல்வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ்
செழுமால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து
பிளந்தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித்
திருநாகேச் சரத்தானே.  6
நின்றஇம் மாதவத்தை
ஒழிப்பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள்
பொடியாக விழித்தல்என்னே
பங்கய மாமலர்மேல்
மதுவுண்டுவண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல்சூழ்
திருநாகேச் சரத்தானே.  7
வரியர நாணதாக
மாமேரு வில்லதாக
அரியன முப்புரங்கள்
அவைஆரழல் ஊட்டல்என்னே
விரிதரு மல்லிகையும்
மலர்ச்சண்பக மும்மளைந்து
திரிதரு வண்டுபண்செய்
திருநாகேச் சரத்தானே.  8
அங்கியல் யோகுதன்னை
அழிப்பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள்
பொடியாக விழித்தல்என்னே
பங்கய மாமலர்மேல்
மதுவுண்டுபண் வண்டறையச்
செங்கயல் நின்றுகளுந்
திருநாகேச் சரத்தானே.  9
குண்டரைக் கூறையின்றித்
திரியுஞ்சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்டதன்மை
விரவாகிய தென்னைகொலோ
தொண்டிரைத் துவணங்கித்
தொழில்பூண்டடி யார்பரவும்
தெண்டிரைத் தண்வயல்சூழ்
திருநாகேச் சரத்தானே.  10
கொங்கணை வண்டரற்றக்
குயிலும்மயி லும்பயிலும்
தெங்கணை பூம்பொழில்சூழ்
திருநாகேச் சரத்தானை
வங்கம் மலிகடல்சூழ்
வயல்நாவலா ரூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல்லார்
அவர்தம்வினை பற்றறுமே.  11