Pages

Saturday, May 30, 2020

Veeratteswarar Temple, Thirukkovilur – Literary Mention

Veeratteswarar Temple, Thirukkovilur – Literary Mention
Thirugnana Sambandar, a 7th Century Tamil Saivite poet, venerated Veeratteswarar in ten verses in Thevaram, compiled as the First ThirumuraiAppar, a contemporary of Sambandar, also venerated Veeratteswarar in ten verses in Thevaram, compiled as the Fifth Thirumurai. As the temple is revered in Thevaram, it is classified as Paadal Petra Sthalam, one of the 276 temples that find mention in the Saiva canon. 
This Temple is the 11th Paadal Petra Shiva Sthalam in Nadu Naadu. Appar is believed to have visited the temple during the series of visits from Thiruvennainallur to Thiruvamathur and Pennadam. The famous Vinayakar Agaval by poetess Avvaiyar dedicated to Vinayaka was sung in this temple. Lord Muruga of this temple is praised in the Thirupugazh hymns of Saint Arunagirinathar.

02.100 (Thirugnana Sambandar):
படைகொள் கூற்றம் வந்துமெய்ப்
பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை
யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை
குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான்
வீரட்டானஞ் சேர்துமே.  1
கரவலாளர் தம்மனைக் கடைகள்
தோறுங் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த
வேண்டில் நீ
குரவமேறி வண்டினங்
குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான்
வீரட்டானஞ் சேர்துமே.  2
உள்ளத்தீரே போதுமின்
னுறுதியாவ தறிதிரேல்
அள்ளற்சேற்றிற் காலிட்டிங்
கவலத்துள் அழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான்
குழகன்கோவ லூர்தனுள்
வெள்ளந்தாங்கு சடையினான்
வீரட்டானஞ் சேர்துமே.  3
கனைகொள் இருமல் சூலைநோய்
கம்பதாளி குன்மமும்
இனையபலவும் மூப்பினோ
டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற்
பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையை வென்ற வேடத்தான்
வீரட்டானஞ் சேர்துமே.  4
உளங்கொள் போகம் உய்த்திடார்
உடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறுந்
துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா
வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான்
வீரட்டானஞ் சேர்துமே.  5
கேடுமூப்புச் சாக்காடு
கெழுமிவந்து நாடொறும்
ஆடுபோல நரைகளாய்
யாக்கைபோக்க தன்றியும்
கூடிநின்று பைம்பொழிற்
குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான்
வீரட்டானஞ் சேர்துமே.  6
உரையும் பாட்டுந் தளர்வெய்திஉ
டம்புமூத்த போதின்கண்
நரையுந் திரையுங் கண்டெள்கி
நகுவர்நமர்கள் ஆதலால்
வரைகொள் பெண்ணை வந்துலா
வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான்
வீரட்டானஞ் சேர்துமே.  7
ஏதமிக்க மூப்பினோ
டிருமல்ஈளை யென்றிவை
ஊதலாக்கை ஓம்புவீர்
உறுதியாவ தறிதிரேல்
போதில்வண்டு பண்செயும்
பூந்தண்கோவ லூர்தனுள்
வேதமோது நெறியினான்
வீரட்டானஞ் சேர்துமே.  8
ஆறுபட்ட புன்சடை
அழகன்ஆயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான்
குழகன்கோவ லூர்தனுள்
நீறுபட்ட கோலத்தான்
நீலகண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான்
வீரட்டானஞ் சேர்துமே.  9
குறிகொளாழி நெஞ்சமே கூறை
துவரிட் டார்களும்
அறிவிலாத அமணர்சொல்
லவத்தமாவ தறிதியேல்
பொறிகொள்வண்டு பண்செயும்
பூந்தண்கோவ லூர்தனுள்
வெறிகொள்கங்கை தாங்கினான்
வீரட்டானஞ் சேர்துமே.  10
கழியொடுலவு கானல்சூழ் காழி
ஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொல்
பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண் டேத்துமின்
அந்தண்கோவ லூர்தனுள்
விழிகொள்பூதப் படையினான்
வீரட்டானஞ் சேர்துமே.  11
04.069 (Appar):
செத்தையேன் சிதம்ப நாயேன்
செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும்
புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன்
இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே
கோவல்வீ ரட்ட னீரே.  1
தலைசுமந் திருகை நாற்றித்
தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன்
வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகொள்மாங் கனிகள் சிந்தும்
கோவல்வீ ரட்ட னீரே.  2
வழித்தலைப் படவு மாட்டேன்
வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப்
பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை
என்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்
கோவல்வீ ரட்ட னீரே.  3
சாற்றுவர் ஐவர் வந்து
சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக்
கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன்
ஆதியை அறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே.  4
தடுத்திலேன் ஐவர் தம்மைத்
தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப்
பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார
ஆர்வலித் தன்பு திண்ணங்
கொடுத்திலேன் கொடிய வாநான்
கோவல்வீ ரட்ட னீரே.  5
மாச்செய்த குரம்பை தன்னை
மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்து நாலு மைந்தும்
நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னுள்
நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன்
கோவல்வீ ரட்ட னீரே.  6
படைகள்போல் வினைகள் வந்து
பற்றியென் பக்கல் நின்றும்
விடகிலா வாத லாலே
விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலேன் என்செய் கேன்நான்
இரப்பவர் தங்கட் கென்றுங்
கொடையிலேன் கொள்வ தேநான்
கோவல்வீ ரட்ட னீரே.  7
பிச்சிலேன் பிறவி தன்னைப்
பேதையேன் பிணக்க மென்னுந்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து
துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக்
கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே
கோவல்வீ ரட்ட னீரே.  8
நிணத்திடை யாக்கை பேணி
நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி
மக்களே சுற்ற மென்னுங்
கணத்திடை ஆட்டப் பட்டுக்
காதலால் உன்னைப் பேணுங்
குணத்திடை வாழ மாட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே.  9
விரிகடல் இலங்கைக் கோனை
வியன்கயி லாயத் தின்கீழ்
இருபது தோளும் பத்துச்
சிரங்களும் நெரிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்
படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த
கோவல்வீ ரட்ட னாரே. 10