Pages

Monday, October 18, 2021

Padikasu Nathar Temple, Azhagaputhur – Appar Hymns

Padikasu Nathar Temple, Azhagaputhur – Appar Hymns

05.061:

முத்தூ ரும்புனல்

மொய்யரி சிற்கரைப்

புத்தூ ரன்னடி

போற்றியென் பாரெலாம்

பொய்த்தூ ரும்புல

னைந்தொடு புல்கிய

மைத்தூ ரும்வினை

மாற்றவும் வல்லரே.  1

பிறைக்க ணிச்சடை

யெம்பெரு மானென்று

கறைக்க ணித்தவர்

கண்ட வணக்கத்தாய்

உறக்க ணித்துரு

காமனத் தார்களைப்

புறக்க ணித்திடும்

புத்தூர்ப் புனிதரே.  2

அரிசி லின்கரை

மேலணி யார்தரு

புரிசை நந்திருப்

புத்தூர்ப் புனிதனைப்

பரிசொ டும்பர

விப்பணி வார்க்கெலாந்

துரிசில் நன்னெறி

தோன்றிடுங் காண்மினே.  3

வேத னைமிகு

வீணையில் மேவிய

கீத னைக்கிள

ருந்நறுங் கொன்றையம்

போத னைப்புனல்

சூழ்ந்தபுத் தூரனை

நாத னைந்நினைந்

தென்மனம் நையுமே.  4

அருப்புப் போன்முலை

யாரல்லல் வாழ்க்கைமேல்

விருப்புச் சேர்நிலை

விட்டுநல் லிட்டமாய்த்

திருப்புத் தூரனைச்

சிந்தை செயச்செயக்

கருப்புச் சாற்றிலும்

அண்ணிக்குங் காண்மினே.  5

பாம்பொ டுமதி

யும்படர் புன்சடைப்

பூம்பு னலும்பொ

திந்தபுத் தூருளான்

நாம்ப ணிந்தடி

போற்றிட நாடொறுஞ்

சாம்பல் என்பு

தனக்கணி யாகுமே.  6

கனலங் கைதனி

லேந்திவெங் காட்டிடை

அனலங் கெய்திநின்

றாடுவர் பாடுவர்

பினலஞ் செஞ்சடை

மேற்பிறை யுந்தரு

புனலுஞ் சூடுவர்

போலும்புத் தூரரே.  7

காற்றி னுங்கடி

தாகி நடப்பதோர்

ஏற்றி னும்மிசைந்

தேறுவர் என்பொடு

நீற்றி னையணி

வர்நினை வாய்த்தமைப்

போற்றி யென்பவர்க்

கன்பர்புத் தூரரே.  8

முன்னும் முப்புரஞ்

செற்றன ராயினும்

அன்ன மொப்பர்

அலந்தடைந் தார்க்கெலாம்

மின்னு மொப்பர்

விரிசடை மேனிசெம்

பொன்னு மொப்பர்புத்

தூரெம் புனிதரே.  9

செருத்த னால்தன

தேர்செல வுய்த்திடுங்

கருத்த னாய்க்கயி

லையெடுத் தானுடல்

பருத்த தோள்கெடப்

பாதத் தொருவிரல்

பொருத்தி னார்பொழி

லார்ந்தபுத் தூரரே.