Pages

Tuesday, April 4, 2023

Masilamani Nathar Temple, Tharangampadi – Literary Mention

Masilamani Nathar Temple, Tharangampadi – Literary Mention

The temple is considered as Thevara Vaippu Sthalam as Devaram hymns sung by Appar and Sundarar had a mention about this temple. The temple is mentioned in 6th Thirumurai in 51st Patikam in 3rd Song, 6th Thirumurai in 70th Patikam in 4th Song & 6th Thirumurai in 71st Patikam in 4th Song by Appar and 7th Thirumurai in 47th Patikam in 4rd Song by Sundarar.

Appar (6-51-3):

அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்

அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்

உண்ணாழி கையார் உமையா ளோடும்

இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்

பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை

மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்

விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த

வீழி மிழலையே மேவி னாரே.

Appar (6-70-4):

எச்சில் இளமர் ஏம நல்லூர்

இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி

அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்

ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை

கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்

கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி

கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்

கயிலாய நாதனையே காண லாமே.

Appar (6-71-4):

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்

பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்

நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்

நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்

உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்

அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்

துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்

துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே.

Sundarar (7-47-4):

ஆரூர் அத்தா ஐயாற் றமுதே

அளப்பூர் அம்மானே

காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற்

கருகா வூரானே

பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான்

பிறவா நெறியானே

பாரூர் பலரும் பரவப் படுவாய்

பாசூ ரம்மானே.