Pages

Friday, September 29, 2023

Pushpavaneswarar Temple, Thirupuvanam – Sundarar Hymns

Pushpavaneswarar Temple, Thirupuvanam – Sundarar Hymns

07.011:

திருவுடை யார்திரு

மால்அய னாலும்

உருவுடை யார்உமை

யாளைஓர் பாகம்

பரிவுடை யார்அடை

வார்வினை தீர்க்கும்

புரிவுடை யார்உறை

பூவணம் ஈதோ.  1

எண்ணி இருந்து

கிடந்தும் நடந்தும்

அண்ண லெனாநினை

வார்வினை தீர்ப்பார்

பண்ணிசை யார்மொழி

யார்பலர் பாடப்

புண்ணிய னார்உறை

பூவணம் ஈதோ.  2

தெள்ளிய பேய்பல

பூதம வற்றொடு

நள்ளிருள் நட்டம

தாடல் நவின்றோர்

புள்ளுவ ராகும்அ

வர்க்கவர் தாமும்

புள்ளுவ னார்உறை

பூவணம் ஈதோ.  3

நிலனுடை மான்மறி

கையது தெய்வக்

கனலுடை மாமழு

ஏந்தியோர் கையில்

அனலுடை யார்அழ

கார்தரு சென்னிப்

புனலுடை யார்உறை

பூவணம் ஈதோ.  4

நடையுடை நல்லெரு

தேறுவர் நல்லார்

கடைகடை தோறிடு

மின்பலி என்பார்

துடியிடை நன்மட

வாளடு மார்பில்

பொடியணி வார்உறை

பூவணம் ஈதோ.  5

மின்னனை யாள்திரு

மேனிவி ளங்கவொர்

தன்னமர் பாகம

தாகிய சங்கரன்

முன்னினை யார்புரம்

மூன்றெரி யூட்டிய

பொன்னனை யான்உறை

பூவணம் ஈதோ.  6

மிக்கிறை யேயவன்

துன்மதி யாலிட

நக்கிறை யேவிர

லாலிற வூன்றி

நெக்கிறை யேநினை

வார்தனி நெஞ்சம்

புக்குறை வான்உறை

பூவணம் ஈதோ.  7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9

சீரின் மிகப்பொலி

யுந்திருப் பூவணம்

ஆரவி ருப்பிட

மாஉறை வான்றனை

ஊரன் உரைத்தசொன்

மாலைகள் பத்திவை

பாரில் உரைப்பவர்

பாவம் அறுப்பரே.  10