Pages

Thursday, March 4, 2021

Agnipureeswarar Temple, Thirupugalur – Sambandar Hymns

Agnipureeswarar Temple, Thirupugalur – Sambandar Hymns

The temple has been praised by the three Nayanmars (Saint Poets) Appar, Thiru Gnana Sambanthar and Sundarar. The hymns of Sambandar are given below;

01.002:

குறிகலந்தஇசை பாடலினான்

நசையாலிவ் வுலகெல்லாம்

நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு

தேறிப் பலி1பேணி

முறிகலந்ததொரு தோலரைமேலுடை

யானிடம் மொய்ம்மலரின்

பொறிகலந்த பொழில்சூழ்ந்த

யலேபுயலாரும் புகலூரே.

பாடம் : 1ஏறும்பலி  1

காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு

மார்பன் னொருபாகம்

மாதிலங்குதிரு மேனியினான்கரு

மானின் னுரியாடை

மீதிலங்க அணிந்தானிமையோர்

தொழமேவும் மிடஞ்சோலைப்

போதிலங்குநசை யால்வரி

வண்டிசைபாடும் புகலூரே.  2

பண்ணிலாவும்மறை பாடலினானிறை

சேரும்வளை யங்கைப்

பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ

லென்றுந் தொழுதேத்த

உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா

வொருவன் னிடமென்பர்

மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில்

மல்கும் புகலூரே.  3

நீரின்மல்குசடை யன்விடையன்னடை

யார்தம் மரண்மூன்றுஞ்

சீரின்மல்குமலை யேசிலையாகமு

னிந்தா னுலகுய்யக்

காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட

கடவுள்ளிட மென்பர்

ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர்

வெய்தும் புகலூரே.  4

செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர்

சேரும் மடியார்மேல்

பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத்

தென்றும் பணிவாரை

மெய்யநின்றபெரு மானுறையும்மிட

மென்ப ரருள்பேணிப்

பொய்யிலாதமனத் தார்பிரியாது

பொருந்தும் புகலூரே.  5

கழலினோசை சிலம்பின்னொலியோசை

கலிக்கப் பயில்கானில்

குழலினோசைகுறட் பாரிடம்போற்றக்

குனித்தா ரிடமென்பர்

விழவினோசையடி யார்மிடைவுற்று

விரும்பிப் பொலிந் தெங்கும்

முழவினோசைமுந் நீர2யர்வெய்த

முழங்கும் புகலூரே.

பாடம் : 2முன்னீர்  6

வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடை

தன்மேல் விளங்கும்மதிசூடி

உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த

வுகக்கும் அருள்தந்தெம்

கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த

கடவுள் ளிடமென்பர்3

புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம்

மல்கும் புகலூரே.

பாடம் : 3கடவுட்கிடமென்பர்  7

தென்னிலங்கையரை யன்வரைபற்றி

யெடுத்தான் முடிதிண்தோள்

தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை

கேட்டன் றருள்செய்த

மின்னிலங்குசடை யான்மடமாதொடு

மேவும் மிடமென்பர்

பொன்னிலங்கு மணிமாளிகை

மேல்மதிதோயும் புகலூரே.  8



நாகம்வைத்தமுடி யானடிகைதொழு

தேத்தும் மடியார்கள்

ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு

மாலுந் தொழுதேத்த

ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய

எம்மா னிடம்போலும்

போகம்வைத்தபொழி லின்நிழலான்

மதுவாரும் புகலூரே.  9

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்

செப்பிற் பொருளல்லாக்

கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள்

கடவுள் ளிடம்போலும்

கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு

தூவித் துதிசெய்து

மெய்தவத்தின்முயல் வாருயர்

வானகமெய்தும் புகலூரே.  10

புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன்

மேவும் புகலூரைக்

கற்று நல்லவவர் காழியுள்ஞானசம்

பந்தன் தமிழ்மாலை

பற்றியென்றும்மிசை பாடியமாந்தர்

பரமன் னடிசேர்ந்து

குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக

ழோங்கிப் பொலிவாரே.

02.115:

வெங்கள்விம்மு குழலிளைய

ராடவ்வெறி விரவுநீர்ப்

பொங்குசெங்கட் கருங்கயல்கள்

பாயும்புக லூர்தனுள்

திங்கள்சூடித் திரிபுரமொ

ரம்பாஎரி யூட்டிய

எங்கள்பெம்மான் அடிபரவ

நாளும்மிடர் கழியுமே.  1

வாழ்ந்தநாளும் மினிவாழுநா

ளும்மிவை யறிதிரேல்

வீழ்ந்தநாளெம் பெருமானை

யேத்தாவிதி யில்லிர்காள்

போழ்ந்ததிங்கட் புரிசடை

யினான்றன்புக லூரையே

சூழ்ந்தவுள்ளம் உடையீர்கள்

உங்கள்துயர் தீருமே.  2

மடையின்நெய்தல் கருங்குவளை

செய்யம்மலர்த் தாமரை

புடைகொள் செந்நெல் விளைகழனி

மல்கும்புக லூர்தனுள்

தொடைகொள் கொன்றை புனைந்தானொர்

பாகம்மதி சூடியை

அடையவல்லார் அமருலகம்

ஆளப்பெறு வார்களே.  3

பூவுந்நீரும் பலியுஞ்

சுமந்துபுக லூரையே

நாவினாலே நவின்றேத்த

லோவார்செவித் துளைகளால்

யாவுங்கேளார் அவன்பெருமை

யல்லால்அடி யார்கள்தாம்

ஓவுநாளும் உணர்வொழிந்த

நாளென்றுளங் கொள்ளவே.  4

அன்னங்கன்னிப் பெடைபுல்கி

யொல்கியணி நடையவாய்ப்

பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன

மாலும்புக லூர்தனுள்

முன்னம்மூன்று மதிலெரித்த

மூர்த்திதிறங் கருதுங்கால்

இன்னரென்னப் பெரிதரியர்

ஏத்தச்சிறி தெளியரே.  5

குலவராகக் குலம்இலரு

மாகக்குணம் புகழுங்கால்

உலகில்நல்ல கதிபெறுவ

ரேனும்மலர் ஊறுதேன்

புலவமெல்லாம் வெறிகமழும்

அந்தண்புக லூர்தனுள்

நிலவமல்கு சடையடிகள்

பாதம்நினை வார்களே.  6

ஆணும்பெண்ணும் மெனநிற்ப

ரேனும்மர வாரமாப்

பூணுமேனும் புகலூர்

தனக்கோர்பொரு ளாயினான்

ஊணும்ஊரார் இடுபிச்சை

யேற்றுண்டுடை கோவணம்

பேணுமேனும் பிரானென்ப

ரால்எம்பெரு மானையே.  7

உய்யவேண்டில் எழுபோதநெஞ்

சேயுயர் இலங்கைக்கோன்

கைகளொல்கக் கருவரையெடுத்

தானையோர் விரலினால்

செய்கைதோன்றச் சிதைத்தருள

வல்லசிவன் மேயபூம்

பொய்கைசூழ்ந்த புகலூர்

புகழப்பொருளாகுமே.  8

நேமியானும் முகநான்

குடையந்நெறி யண்ணலும்

ஆமிதென்று தகைந்தேத்தப்

போயாரழ லாயினான்

சாமிதாதை சரணாகு

மென்றுதலை சாய்மினோ

பூமியெல்லாம் புகழ்செல்வம்

மல்கும்புக லூரையே.  9

வேர்த்தமெய்யர் உருவத்துடை

விட்டுழல் வார்களும்

போர்த்தகூறைப் போதிநீழ

லாரும்புக லூர்தனுள்

தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த

தேவன்திறங் கருதுங்கால்

ஓர்த்துமெய்யென் றுணராது

பாதந்தொழு துய்ம்மினே.  10

புந்தியார்ந்த பெரியோர்கள்

ஏத்தும்புக லூர்தனுள்

வெந்த சாம்பற் பொடிப்பூச

வல்லவிடை யூர்தியை

அந்தமில்லா அனலாட

லானையணி ஞானசம்

பந்தன்சொன்ன தமிழ்பாடி

யாடக்கெடும் பாவமே.