Pages

Tuesday, October 5, 2021

Lakshmipureeswarar Temple, Thirunindriyur – Appar Hymns

Lakshmipureeswarar Temple, Thirunindriyur – Appar Hymns

05.023:

கொடுங்கண் வெண்டலை

கொண்டு குறைவிலைப்

படுங்க ணொன்றில

ராய்ப்பலி தேர்ந்துண்பர்

நெடுங்கண் மங்கைய

ராட்டயர் நின்றியூர்க்

கடுங்கைக் கூற்றுதைத்

திட்ட கருத்தரே.  1

வீதி வேல்நெடுங்

கண்ணியர் வெள்வளை

நீதி யேகொளப்

பாலது நின்றியூர்

வேத மோதி

விளங்குவெண் தோட்டராய்க்

காதில் வெண்குழை

வைத்தவெங் கள்வரே.  2

புற்றி னார்அர

வம்புலித் தோல்மிசைச்

சுற்றி னார்சுண்ணப்

போர்வைகொண் டார்சுடர்

நெற்றிக் கண்ணுடை

யாரமர் நின்றியூர்

பற்றி னாரைப்பற்

றாவினை பாவமே.  3

பறையின் ஓசையும்

பாடலின் ஓசையும்

மறையின் ஓசையும்

மல்கி அயலெலாம்

நிறையும் பூம்பொழில்

சூழ்திரு நின்றியூர்

உறையும் ஈசனை

உள்குமென் உள்ளமே.  4

சுனையுள் நீலஞ்

சுளியும் நெடுங்கணாள்

இனைய னென்றென்று

மேசுவ தென்கொலோ

நினையுந் தண்வயல்

சூழ்திரு நின்றியூர்ப்

பனையின் ஈருரி

போர்த்த பரமரே.  5

உரைப்பக் கேண்மின்நும்

உச்சியு ளான்றனை

நிரைப்பொன் மாமதில்

சூழ்திரு நின்றியூர்

உரைப்பொற் கற்றைய

ராரிவ ரோவெனிற்

திரைத்துப் பாடித்

திரிதருஞ் செல்வரே.  6

கன்றி யூர்முகில்

போலுங் கருங்களி

றின்றி ஏறல

னாலிது வென்கொலோ

நின்றி யூர்பதி

யாக நிலாயவன்

வென்றி யேறுடை

எங்கள் விகிர்தனே.  7

நிலையி லாவெள்ளை

மாலையன் நீண்டதோர்

கொலைவி லாலெயில்

எய்த கொடியவன்

நிலையி னார்வயல்

சூழ்திரு நின்றியூர்

உரையி னாற்றொழு

வார்வினை ஓயுமே.  8

அஞ்சி யாகிலும்

அன்புபட் டாகிலும்

நெஞ்சம் வாழி

நினைநின்றி யூரைநீ

இஞ்சி மாமதில்

எய்திமை யோர்தொழக்

குஞ்சி வான்பிறை

சூடிய கூத்தனே.  9

எளிய னாமொழி

யாஇலங் கைக்கிறை

களியி னாற்கயி

லாய மெடுத்தவன்

நெளிய வூன்ற

வலானமர் நின்றியூர்

அளியி னாற்றொழு

வார்வினை யல்குமே.