Saturday, June 6, 2020

Prananadeswarar Temple, Tirumangalakudi – Literary Mention

Prananadeswarar Temple, Tirumangalakudi – Literary Mention
The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Devaram, written by Tamil saint poets known as the Nayanmars and classified as Paadal Petra Sthalam. This Temple is the 92nd Devaram Paadal Petra Shiva Sthalam and 38th Sthalam on north side of Cauvery River in Chozha Nadu. Thirugnana Sambandar and Appar has sung hymns in praise of Lord Shiva of this temple
Thirugnana Sambandar (02.010):
சீரி னார்மணி யும்மகில்
சந்துஞ்செ றிவரை
வாரி நீர்வரு பொன்னிவ
டமங்க லக்குடி
நீரின் மாமுனி வன்நெடுங்
கைகொடு நீர்தனைப்
பூரித் தாட்டியர்ச் சிக்கஇ
ருந்த புராணனே.  1
பணங்கொ ளாடர வல்குல்நல்
லார்பயின் றேத்தவே
மணங்கொள் மாமயி லாலும்பொ
ழில்மங்க லக்குடி
இணங்கி லாமறை யோரிமை
யோர்தொழு தேத்திட
அணங்கி னோடிருந் தானடி
யேசர ணாகுமே.  2
கருங்கை யானையின் ஈருரி
போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாம்மண மார்பொழில்
சூழ்மங்க லக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி
னானடி யன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை
யாயின வீடுமே.  3
பறையி னோடொலி பாடலும்
ஆடலும் பாரிடம்
மறையி னோடியல் மல்கிடு
வார்மங்க லக்குடிக்
குறைவி லாநிறை வேகுண
மில்குண மேயென்று
முறையி னால்வணங் கும்மவர்
முன்னெறி காண்பரே.  4
ஆனி லங்கிளர் ஐந்தும்
அவிர்முடி யாடியோர்
மானி லங்கையி னான்மண
மார்மங்க லக்குடி
ஊனில் வெண்டலைக் கையுடை
யானுயர் பாதமே
ஞான மாகநின் றேத்தவல்
லார்வினை நாசமே.  5
தேனு மாயமு தாகிநின்
றான்தெளி சிந்தையுள்
வானு மாய்மதி சூடவல்
லான்மங்க லக்குடிக்
கோனை நாடொறும் ஏத்திக்
குணங்கொடு கூறுவார்
ஊனமானவை போயறும்
உய்யும்வ கையதே.  6
வேள் படுத்திடு கண்ணினன்
மேருவில் லாகவே
வாள ரக்கர் புரமெரித்
தான்மங்க லக்குடி
ஆளும் ஆதிப்பி ரானடி
கள்ளடைந் தேத்தவே
கோளு நாளவை போயறுங்
குற்றமில் லார்களே.  7
பொலியும் மால்வரை புக்கெடுத்
தான்புகழ்ந் தேத்திட
வலியும் வாளொடு நாள்கொடுத்
தான்மங்க லக்குடிப்
புலியின் ஆடையி னானடி
யேத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக
வல்லவர் காண்மினே.  8
ஞாலம் முன்படைத் தான்நளிர்
மாமலர் மேலயன்
மாலுங் காணவொ ணாஎரி
யான்மங்க லக்குடி
ஏல வார்குழ லாளொரு
பாகமி டங்கொடு
கோல மாகிநின் றான்குணங்
கூறுங் குணமதே.  9
மெய்யின் மாசினர் மேனிவி
ரிதுவ ராடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர்
சேர்மங்க லக்குடிச்
செய்ய மேனிச்செ ழும்புனற்
கங்கைசெ றிசடை
ஐயன் சேவடி யேத்தவல்
லார்க்கழ காகுமே.  10
மந்த மாம்பொழில் சூழ்மங்க
லக்குடி மன்னிய
எந்தை யையெழி லார்பொழிற்
காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு
ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லாரிமை
யோர்முத லாவரே.
Appar (05.073:
தங்க லப்பிய
தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழித்
தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழற்
கொம்பனை யாளொடு
மங்க லக்குடி
மேய மணாளனே.  1
காவி ரியின்வ
டகரைக் காண்டகு
மாவி ரியும்பொ
ழில்மங் கலக்குடித்
தேவ ரியும்பி
ரமனுந் தேடொணாத்
தூவெ ரிச்சுடர்ச்
சோதியுட் சோதியே.  2
மங்க லக்குடி
ஈசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன்
விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கர
தாரி சதுர்முகன்
அங்க கத்திய
னும்மர்ச்சித் தாரன்றே.  3
மஞ்சன் வார்கடல்
சூழ்மங்க லக்குடி
நஞ்ச மாரமு
தாக நயந்துகொண்
டஞ்சு மாட
லமர்ந்தடி யேனுடை
நெஞ்ச மாலய
மாக்கொண்டு நின்றதே.  4
செல்வ மல்கு
திருமங் கலக்குடிச்
செல்வ மல்கு
சிவநிய மத்தராய்ச்
செல்வ மல்கு
செழுமறை யோர்தொழச்
செல்வன் றேவியொ
டுந்திகழ் கோயிலே.  5
மன்னு சீர்மங்
கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப்
பிஞ்ஞகன் றன்பெயர்
உன்னு வாரு
முரைக்கவல் லார்களுந்
துன்னு வார்நன்
னெறிதொடர் வெய்தவே.  6
மாத ரார்மரு
வும்மங்க லக்குடி
ஆதி நாயகன்
அண்டர்கள் நாயகன்
வேத நாயகன்
வேதியர் நாயகன்
பூத நாயகன்
புண்ணிய மூர்த்தியே.  7
வண்டு சேர்பொழில்
சூழ்மங்க லக்குடி
விண்ட தாதையைத்
தாளற வீசிய
சண்ட நாயக
னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி
சூடிய சோதியே.  8
கூசு வாரலர்
குண்டர் குணமிலர்
நேச மேது
மிலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங்க
லக்குடி மேவிய
ஈசன் வேறு
படுக்கவுய்ந் தேனன்றே.  9
மங்க லக்குடி
யான்கயி லைமலை
அங்க லைத்தெடுக்
குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு
தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு
துய்ந்தனன் தானன்றே.