Thursday, March 4, 2021

Agnipureeswarar Temple, Thirupugalur – Appar Hymns

Agnipureeswarar Temple, Thirupugalur – Appar Hymns

The temple has been praised by the three Nayanmars (Saint Poets) Appar, Thiru Gnana Sambanthar and Sundarar. The hymns of Appar are given below;

04.016:

செய்யர் வெண்ணூலர்

கருமான் மறிதுள்ளுங்

கையர் கனைகழல்

கட்டிய காலினர்

மெய்யர் மெய்ந்நின்

றவர்க்கல்லா தவர்க்கென்றும்

பொய்யர் புகலூர்ப்

புரிசடை யாரே.  1

மேகநல் ஊர்தியர்

மின்போல் மிளிர்சடைப்

பாக மதிநுத

லாளையொர் பாகத்தர்

நாக வளையினர்

நாக வுடையினர்

போகர் புகலூர்ப்

புரிசடை யாரே.  2

பெருந்தாழ் சடைமுடி

மேற்பிறை சூடிக்

கருந்தாழ் குழலியுந்

தாமுங் கலந்து

திருந்தா மனமுடை

யார்திறத் தென்றும்

பொருந்தார் புகலூர்ப்

புரிசடை யாரே.  3

அக்கார் அணிவடம்

ஆகத்தர் நாகத்தர்

நக்கார் இளமதிக்

கண்ணியர் நாடொறும்

உக்கார் தலைபிடித்

துண்பலிக் கூர்தொறும்

புக்கார் புகலூர்ப்

புரிசடை யாரே.  4

ஆர்த்தார் உயிரடும்

அந்தகன் றன்னுடல்

பேர்த்தார் பிறைநுதற்

பெண்ணின்நல் லாள்உட்கக்

கூர்த்தார் மருப்பிற்

கொலைக்களிற் றீருரி

போர்த்தார் புகலூர்ப்

புரிசடை யாரே.  5

தூமன் சுறவந்

துதைந்த கொடியுடைக்

காமன் கணைவலங்

காய்ந்தமுக் கண்ணினர்

சேம நெறியினர்

சீரை யுடையவர்

பூமன் புகலூர்ப்

புரிசடை யாரே.  6

உதைத்தார் மறலி

உருளவொர் காலாற்

சிதைத்தார் திகழ்தக்கன்

செய்தநல் வேள்வி

பதைத்தார் சிரங்கரங்

கொண்டுவெய் யோன்கண்

புதைத்தார் புகலூர்ப்

புரிசடை யாரே.  7

கரிந்தார் தலையர்

கடிமதில் மூன்றுந்

தெரிந்தார் கணைகள்

செழுந்தழ லுண்ண

விரிந்தார் சடைமேல்

விரிபுனற் கங்கை

புரிந்தார் புகலூர்ப்

புரிசடை யாரே.  8

ஈண்டார் அழலி

னிருவருங் கைதொழ

நீண்டார் நெடுந்தடு

மாற்ற நிலையஞ்ச

மாண்டார்தம் என்பு

மலர்க்கொன்றை மாலையும்

பூண்டார் புகலூர்ப்

புரிசடை யாரே.  9

கறுத்தார் மணிகண்டங்

கால்விர லூன்றி

இறுத்தார் இலங்கையர்

கோன்முடி பத்தும்

அறுத்தார் புலனைந்தும்

ஆயிழை பாகம்

பொறுத்தார் புகலூர்ப்

புரிசடை யாரே.

04.054:

பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்

பாறிநீ றாகி வீழப்

புகைத்திட்ட தேவர் கோவே

பொறியிலேன் உடலந் தன்னுள்

அகைத்திட்டங் கதனை நாளும்

ஐவர்கொண் டாட்ட வாடித்

திகைத்திட்டேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.  1

மையரி மதர்த்த ஒண்கண்

மாதரார் வலையிற் பட்டுக்

கையெரி சூல மேந்துங்

கடவுளை நினைய மாட்டேன்

ஐநெரிந் தகமி டற்றே

அடைக்கும்போ தாவி யார்தாஞ்

செய்வதொன் றறிய மாட்டேன்

திருப்புக லூர னீரே.  2

முப்பதும் முப்பத் தாறும்

முப்பதும் இடுகு ரம்பை

அப்பர்போல் ஐவர் வந்து

அதுதரு கிதுவி டென்று

ஒப்பவே நலிய லுற்றால்

உய்யுமா றறிய மாட்டேன்

செப்பமே திகழு மேனித்

திருப்புக லூர னீரே.  3

பொறியிலா அழுக்கை யோம்பிப்

பொய்யினை மெய்யென் றெண்ணி

நெறியலா நெறிகள் சென்றேன்

நீதனேன் நீதி யேதும்

அறிவிலேன் அமரர் கோவே

அமுதினை மனனில் வைக்குஞ்

செறிவிலேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.  4

அளியினார் குழலி னார்கள்

அவர்களுக் கன்ப தாகிக்

களியினார் பாடல் ஓவாக்

கடவூர்வீ ரட்ட மென்னுந்

தளியினார் பாத நாளும்

நினைவிலாத் தகவில் நெஞ்சந்

தெளிவிலேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.  5

இலவினார் மாதர் பாலே

இசைந்துநான் இருந்து பின்னும்

நிலவுநாள் பலவென் றெண்ணி

நீதனேன் ஆதி உன்னை

உலவிநான் உள்க மாட்டேன்

உன்னடி பரவு ஞானஞ்

செலவிலேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.  6

காத்திலேன் இரண்டும் மூன்றுங்

கல்வியேல் இல்லை என்பால்

வாய்த்திலேன் அடிமை தன்னுள்

வாய்மையால் தூயே னல்லேன்

பார்த்தனுக் கருள்கள் செய்த

பரமனே பரவு வார்கள்

தீர்த்தமே திகழும் பொய்கைத்

திருப்புக லூர னீரே.  7

நீருமாய்த் தீயு மாகி

நிலனுமாய் விசும்பு மாகி

ஏருடைக் கதிர்க ளாகி

இமையவர் இறைஞ்ச நின்று

ஆய்வதற் கரிய ராகி

அங்கங்கே யாடு கின்ற

தேவர்க்குந் தேவ ராவார்

திருப்புக லூர னாரே.  8

மெய்யுளே விளக்கை ஏற்றி

வேண்டள வுயரத் தூண்டி

உய்வதோர் உபாயம் பற்றி

உகக்கின்றேன் உகவா வண்ணம்

ஐவரை அகத்தே வைத்தீர்

அவர்களே வலியர் சாலச்

செய்வதொன் றறிய மாட்டேன்

திருப்புக லூர னீரே.  9

அருவரை தாங்கி னானும்

அருமறை யாதி யானும்

இருவரும் அறிய மாட்டா

ஈசனார் இலங்கை வேந்தன்

கருவரை எடுத்த ஞான்று

கண்வழி குருதி சோரத்

திருவிரல் சிறிது வைத்தார்

திருப்புக லூர னாரே.

04.105:

தன்னைச் சரணென்று தாளடைந்

தேன்றன் அடியடையப்

புன்னைப் பொழிற்புக லூரண்ணல்

செய்வன கேண்மின்களோ

என்னைப் பிறப்பறுத் தென்வினை

கட்டறுத் தேழ்நரகத்

தென்னைக் கிடக்கலொட் டான்சிவ

லோகத் திருத்திடுமே.  1

பொன்னை வகுத்தன்ன மேனிய

னேபுணர் மென்முலையாள்

தன்னை வகுத்தன்ன பாகத்தனே

தமியேற் கிரங்காய்

புன்னை மலர்த்தலை வண்டுறங்

கும்புக லூரரசே

என்னை வகுத்திலை யேலிடும்

பைக்கிடம் யாதுசொல்லே.  2

இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  3

பொன்னள வார்சடைக் கொன்றையி

னாய்புக லூரரசே

மன்னுள தேவர்கள் தேடு

மருந்தே வலஞ்சுழியாய்

என்னள வேயுனக் காட்பட்

டிடைக்கலத் தேகிடப்பார்

உன்னள வேயெனக் கொன்றுமி

ரங்காத உத்தமனே.  4

இப்பதிகத்தில் 5-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  9

ஓணப் பிரானும் ஒளிர்மா

மலர்மிசை உத்தமனுங்

காணப் பராவியுங் காண்கின்

றிலர்கர நாலைந்துடைத்

தோணற் பிரானை வலிதொலைத்

தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்

கோணப் பிரானைக் குறுகக்

குறுகா கொடுவினையே.

05.046:

துன்னக் கோவணச்

சுண்ணவெண் ணீறணி

பொன்னக் கன்ன

சடைப்புக லூரரோ

மின்னக் கன்னவெண்

டிங்களைப் பாம்புடன்

என்னுக் கோவுடன்

வைத்திட் டிருப்பதே.  1

இரைக்கும் பாம்பு

மெறிதரு திங்களும்

நுரைக்குங் கங்கையும்

நுண்ணிய செஞ்சடைப்

புரைப்பி லாத

பொழிற்புக லூரரை

உரைக்கு மாசொல்லி

ஒள்வளை சோருமே.  2

ஊச லாம்அர

வல்குலென் சோர்குழல்

ஏச லாம்பழி

தந்தெழில் கொண்டனர்

ஓசொ லாய்மக

ளேமுறை யோவென்று

பூசல் நாமிடு

தும்புக லூரர்க்கே.  3

மின்னின் நேரிடை

யாளுமை பங்கனைத்

தன்னை நேரொப்

பிலாத தலைவனைப்

புன்னைக் கானற்

பொழில்புக லூரனை

என்னு ளாகவைத்

தின்புற் றிருப்பனே.  4

விண்ணி னார்மதி

சூடிய வேந்தனை

எண்ணி நாமங்கள்

ஓதி எழுத்தஞ்சுங்

கண்ணி னாற்கழல்

காண்பிட மேதெனிற்

புண்ணி யன்புக

லூருமென் நெஞ்சுமே.  5

அண்ட வாணர்

அமுதுண நஞ்சுண்டு

பண்டு நான்மறை

யோதிய பாடலன்

தொண்ட ராகித்

தொழுது மதிப்பவர்

புண்ட ரீகத்து

ளார்புக லூரரே.  6

தத்து வந்தலை

கண்டறி வாரிலை

தத்து வந்தலை

கண்டவர் கண்டிலர்

தத்து வந்தலை

நின்றவர்க் கல்லது

தத்து வன்னலன்

தண்புக லூரனே.  7

பெருங்கை யாகிப்

பிளிறி வருவதோர்

கருங்கை யானைக்

களிற்றுரி போர்த்தவர்

வருங்கை யானை

மதகளி றஞ்சினைப்

பொருங்கை யானைகண்

டீர்புக லூரரே.  8

பொன்னொத் தநிறத்

தானும் பொருகடல்

தன்னொத் தநிறத்

தானும் அறிகிலாப்

புன்னைத் தாது

பொழிற்புக லூரரை

என்னத் தாவென

என்னிடர் தீருமே.  9

மத்த னாய்மதி

யாது மலைதனை

எத்தி னான்றிரள்

தோள்முடி பத்திற

ஒத்தி னான்விர

லாலொருங் கேத்தலும்

பொத்தி னான்புக

லூரைத் தொழுமினே.

06.099:

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ

எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்

கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்

கழலடியே கைதொழுது காணி னல்லால்

ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்

புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  1

அங்கமே பூண்டாய் அனலா டினாய்

ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்

பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்

பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்

சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்

சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்

சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்

திருப்புகலூர் மேவிய தேவ தேவே.  2

பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்

பளிக்குக் குழையினாய் பண்ணார் இன்சொல்

மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்

மான்மறிகை யேந்தினாய் வஞ்சக் கள்வர்

ஐவரையும் என்மேற் றரவ றுத்தாய்

அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை

பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  3

தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்

சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே

மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்

மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்

அருளாகி ஆதியாய் வேத மாகி

அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்

பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  4

நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்

நீங்காமை வைத்துகந்த நீதி யானே

பாரேறு படுதலையிற் பலிகொள் வானே

பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா

காரேறு முகிலனைய கண்டத் தானே

கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த

போரேறே உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  5

விரிசடையாய் வேதியனே வேத கீதா

விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்

திரிபுரங்க ளெரிசெய்த தேவ தேவே

திருவாரூர்த் திருமூலட் டான மேயாய்

மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்

வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்

புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  6

தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்

திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று

நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி

நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்

காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்

கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்

பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  7

நெய்யாடி நின்மலனே நீல கண்டா

நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே

மையாடு கண்மடவாள் பாகத் தானே

மான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய்

கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை

கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று

பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  8

துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்

துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்

தன்னனையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்

சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே

அன்ன நடைமடவாள் பாகத் தானே

அக்காரம் பூண்டானே ஆதி யானே

பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  9

ஒருவனையு மல்லா துணரா துள்ளம்

உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற

இருவரையும் மூவரையும் என்மே லேவி

இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்

கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்

கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற

பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  10