Saturday, August 5, 2023

Pazhampathi Nathar Temple, Thiruppunavasal – Literary Mention

Pazhampathi Nathar Temple, Thiruppunavasal – Literary Mention

The temple is considered as one of the shrines of the 276 Paadal Petra Sthalams (Shiva Sthalams) glorified in the early medieval Thevaram poems by Tamil Saivite Nayanar Tirugnanasambandar and Appar. This temple is considered as 251st Devaram Paadal Petra Shiva Sthalam and 7th sthalam in Pandya Nadu. Lord Muruga in the temple is praised in the Thirupugazh hymns of saint Arunagirinathar. Ramalingar also praised Lord Shiva of this temple in his Thiruvarutpa hymns.

Sundarar (07.050):

சித்தம் நீநினை என்னொடு

சூளறும் வைகலும்

மத்த யானையின் ஈருரி

போர்த்த மணாளனூர்

பத்தர் தாம்பலர் பாடிநின்

றாடும் பழம்பதி

பொத்தில் ஆந்தைகள் பாட்ட

றாப்புன வாயிலே.  1

கருது நீமனம் என்னொடு

சூளறும் வைகலும்

எருது மேற்கொளும் எம்பெரு

மாற்கிட மாவது

மருத வானவர் வைகும்

இடம்மற வேடுவர்

பொருது சாத்தொடு பூசல

றாப்புன வாயிலே.  2

தொக்கா யமனம் என்னொடு

சூளறும் வைகலும்

நக்கான் நமை யாளுடை

யான்நவி லும்மிடம்

அக்கோ டரவார்த் தபிரா

னடிக் கன்பராய்ப்

புக்கா ரவர் போற்றொழி

யாப்புன வாயிலே.  3

வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு

சூளறும் வைகலும்

பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன்

னாமது வேபுகல்

கற்குன்றுந் தூறுங் கடுவெளி

யுங்கடற் கானல்வாய்ப்

புற்கென்று தோன்றிடு மெம்பெரு

மான்புன வாயிலே.  4

நில்லாய் மனம் என்னொடு

சூளறும் வைகலும்

நல்லான் நமை யாளுடை

யான்நவி லும்மிடம்

வில்லாய்க் கணை வேட்டுவர்

ஆட்ட வெருண்டுபோய்ப்

புல்வாய்க் கணம் புக்கொளிக்

கும்புன வாயிலே.  5

மறவல் நீமனம் என்னொடு

சூளறும் வைகலும்

உறவும் ஊழியு மாயபெம்

மாற்கிட மாவது

பிறவு கள்ளியின் நீள்கவட்

டேறித்தன் பேடையைப்

புறவங் கூப்பிடப் பொன்புனஞ்

சூழ்புன வாயிலே.  6

ஏசற்று நீநினை யென்னொடு

சூளறும் வைகலும்

பாசற் றவர் பாடிநின்

றாடும் பழம்பதி

தேசத் தடியவர் வந்திரு

போதும் வணங்கிடப்

பூசற் றுடிபூச லறாப்

புன வாயிலே.  7

கொள்ளி வாயின கூரெயிற்

றேனங் கிழிக்கவே

தெள்ளி மாமணி தீவிழிக்

கும்மிடஞ் செந்தறை

கள்ளி வற்றிப்புல் தீந்துவெங்

கானங் கழிக்கவே

புள்ளி மானினம் புக்கொளிக்

கும்புன வாயிலே.  8

எற்றே நினை என்னொடுஞ்

சூளறும் வைகலும்

மற்றேதும் வேண்டா வல்வினை

யாயின மாய்ந்தறக்

கற்றூறு கார்க் காட்டிடை

மேய்ந்தகார்க் கோழிபோய்ப்

புற்றேறிக் கூகூ எனஅழைக்

கும்புன வாயிலே.  9

பொடியாடு மேனியன் பொன்புனஞ்

சூழ்புன வாயிலை

அடியார் அடியன் நாவல

வூரன் உரைத்தன

மடியாது கற்றிவை யேத்தவல்

லார்வினை மாய்ந்துபோய்க்

குடியாகப் பாடிநின் றாடவல்

லார்க்கில்லை குற்றமே.  10

Sambandar (03.011):

மின்னியல் செஞ்சடை வெண்பிறை

யன்விரி நூலினன்

பன்னிய நான்மறை பாடியா

டிப்பல வூர்கள்போய்

அன்னம்அன் னந்நடை யாளொ

டும்மம ரும்மிடம்

புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க்

கும்புன வாயிலே.  1

விண்டவர் தம்புரம் மூன்றெரித்

துவிடை யேறிப்போய்

வண்டம ருங்குழல் மங்கையொ

டும்மகிழ்ந் தானிடங்

கண்டலும் ஞாழலும் நின்றுபெ

ருங்கடற் கானல்வாய்ப்

புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந்

தபுன வாயிலே.  2

விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்

புடைபட வாடிய வேடத்தா

னும்புன வாயிலிற்

தொடைநவில் கொன்றையந் தாரினா

னுஞ்சுடர் வெண்மழுப்

படைவலன் ஏந்திய பால்நெய்யா

டும்பர மனன்றே.  3

சங்கவெண் தோடணி காதினா

னுஞ்சடை தாழவே

அங்கையி லங்கழ லேந்தினா

னும்மழ காகவே

பொங்கர வம்மணி மார்பினா

னும்புன வாயிலிற்

பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின்

றபர மேட்டியே.  4

கலிபடு தண்கடல் நஞ்சமுண்

டகறைக் கண்டனும்

புலியதள் பாம்பரைச் சுற்றினா

னும்புன வாயிலில்

ஒலிதரு தண்புன லோடெருக்

கும்மத மத்தமும்

மெலிதரு வெண்பிறை சூடிநின்

றவிடை யூர்தியே.  5

வாருறு மென்முலை மங்கைபா

டநட மாடிப்போய்க்

காருறு கொன்றைவெண் திங்களா

னுங்கனல் வாயதோர்

போருறு வெண்மழு வேந்தினா

னும்புன வாயிலிற்

சீருறு செல்வமல் கவ்விருந்

தசிவ லோகனே.  6

பெருங்கடல் நஞ்சமு துண்டுகந்

துபெருங் காட்டிடைத்

திருந்திள மென்முலைத் தேவிபா

டந்நட மாடிப்போய்ப்

பொருந்தலர் தம்புரம் மூன்றுமெய்

துபுன வாயிலில்

இருந்தவன் தன்கழ லேத்துவார்

கட்கிட ரில்லையே.  7

மனமிகு வேலனவ் வாளரக்

கன்வலி யொல்கிட

வனமிகு மால்வரை யாலடர்த்

தானிட மன்னிய

இனமிகு தொல்புகழ் பாடலா

டல்லெழின் மல்கிய

புனமிகு கொன்றையந் தென்றலார்ந்

தபுன வாயிலே.  8

திருவளர் தாமரை மேவினா

னுந்திகழ் பாற்கடற்

கருநிற வண்ணனுங் காண்பரி

யகட வுள்ளிடம்

நரல்சுரி சங்கொடும் இப்பியுந்

திந்நலம் மல்கிய

பொருகடல் வெண்டிரை வந்தெறி

யும்புன வாயிலே.  9

போதியெ னப்பெய ராயினா

ரும்பொறி யில்சமண்

சாதியு ரைப்பன கொண்டயர்ந்

துதளர் வெய்தன்மின்

போதவிழ் தண்பொழில் மல்குமந்

தண்புன வாயிலில்

வேதனை நாடொறும் ஏத்துவார்

மேல்வினை வீடுமே.  10

பொற்றொடி யாளுமை பங்கன்மே

வும்புன வாயிலைக்

கற்றவர் தாந்தொழு தேத்தநின்

றகடற் காழியான்

நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்

னதமிழ் நன்மையால்

அற்றமில் பாடல்பத் தேத்தவல்

லாரருள் சேர்வரே.