Saturday, November 21, 2020

Manickavannar Temple, Thiruvalaputhur – Literary Mention

Manickavannar Temple, Thiruvalaputhur – Literary Mention

This Temple is considered as one of the shrines of the 276 Paadal Petra Sthalams glorified in the early medieval Thevaram hymns. This Temple is the 83rd Devara Paadal Petra Shiva Sthalam and 29th sthalam on the north side of river Cauvery in Chozha Nadu. Thirugnana Sambandar and Sundarar has sung hymns in praise of Lord Shiva of this temple

Sambandar (01.040):

பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்

பூத கணம்புடை சூழக்

கொடியுடை யூர்திரிந் தையங்

கொண்டு பலபல கூறி

வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்

ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்

கடிகமழ் மாமல ரிட்டுக்

கறைமிடற் றானடி காண்போம்.  1

அரைகெழு கோவண ஆடையின் மேலோர்

ஆடர வம்அசைத் தையம்

புரைகெழு வெண்டலை யேந்திப்

போர்விடை யேறிப் புகழ

வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்

ஆயவன் வாழ்கொளி புத்தூர்

விரைகமழ்1  மாமலர் தூவி

விரிசடை யானடி சேர்வோம்.2

பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்

புன்றலை யங்கையி லேந்தி

ஊண்இடு பிச்சையூ ரையம்

உண்டியென் றுபல கூறி

வாநெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்

ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்

தாள்நெடு மாமல ரிட்டுத்

தலைவன தாள்நிழல் சார்வோம்.  3

தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை

தாழ்சடை மேலவை சூடி

ஊரிடு பிச்சைகொள் செல்வம்

உண்டியென் றுபல கூறி

வாரிடு மென்முலை மாதொரு பாகம்

ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்

காரிடு மாமலர் தூவிக்

கறைமிடற் றானடி காண்போம்.  4

கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்

காதிலொர் வெண்குழை யோடு

புனமலர் மாலை புனைந்தூர்

புகுதியென் றேபல கூறி

வனமுலை மாமலை மங்கையொர் பாகம்

ஆயவன் வாழ்கொளி புத்தூர்

இனமல ரேய்ந்தன தூவி

யெம்பெரு மானடி சேர்வோம்.  5

அளைவளர் நாகம் அசைத்தன லாடி

அலர்மிசை அந்தணன் உச்சிக்

களைதலை யிற்பலி கொள்ளுங்

கருத்தனே கள்வனே யென்னா

வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்

ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்

தளையவிழ் மாமலர் தூவித்

தலைவன தாளிணை சார்வோம்.  6

அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து

வழிதலை யங்கையி லேந்தி

உடலிடு பிச்சையோ டையம்

உண்டியென் றுபல கூறி

மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்

ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்

தடமல ராயின தூவித்

தலைவன தாள்நிழல் சார்வோம்.  7

உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்

ஒளிர்கட கக்கை அடர்த்து

அயலிடு பிச்சையோ டையம்

ஆர்தலை யென்றடி போற்றி

வயல்விரி நீல நெடுங்கணி பாகம்

ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்

சயவிரி மாமலர் தூவி

தாழ்சடை யானடி சார்வோம்.  8

கரியவன் நான்முகன் கைதொழு தேத்தக்

காணலுஞ் சாரலும் ஆகா

எரியுரு வாகியூ ரையம்

இடுபலி யுண்ணியென் றேத்தி

வரியர வல்குல் மடந்தையொர் பாகம்

ஆயவன் வாழ்கொளி புத்தூர்

விரிமல ராயின தூவி

விகிர்தன சேவடி சேர்வோம்.  9

குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யிற்

கொள்கையி னார்புறங் கூற

வெண்டலை யிற்பலி கொண்டல்

விரும்பினை யென்று விளம்பி

வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்

ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்

தொண்டர்கள் மாமலர் தூவத்

தோன்றிநின் றானடி சேர்வோம்.  10

கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்

கரைபொரு காழிய மூதூர்

நல்லுயர் நான்மறை நாவின்

நற்றமிழ் ஞானசம் பந்தன்

வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்

வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்

சொல்லிய பாடல்கள் வல்லார்

துயர்கெடு தல்எளி தாமே.  11

Sambandar (02.094):

சாகை ஆயிர முடையார்

சாமமும் ஓதுவ துடையார்

ஈகை யார்கடை நோக்கி

யிரப்பதும் பலபல வுடையார்

தோகை மாமயி லனைய

துடியிடை பாகமும் உடையார்

வாகை நுண்துளி வீசும்

வாழ்கொளி புத்தூ ருளாரே.  1

எண்ணில் ஈரமும் உடையார்

எத்தனை யோரிவர் அறங்கள்

கண்ணும் ஆயிரம் உடையார்

கையுமொ ராயிரம் உடையார்

பெண்ணும் ஆயிரம் உடையார்

பெருமையொ ராயிரம் உடையார்

வண்ணம் ஆயிரம் உடையார்

வாழ்கொளி புத்தூ ருளாரே.  2

நொடியொ ராயிரம் உடையார்

நுண்ணிய ராமவர் நோக்கும்

வடிவும் ஆயிரம் உடையார்

வண்ணமும் ஆயிரம் உடையார்

முடியும் ஆயிரம் உடையார்

மொய்குழ லாளையும் உடையார்

வடிவும் ஆயிரம் உடையார்

வாழ்கொளி புத்தூ ருளாரே.  3

பஞ்சி நுண்துகி லன்ன

பைங்கழற் சேவடி யுடையார்

குஞ்சி மேகலை யுடையார்

கொந்தணி வேல்வல னுடையார்

அஞ்சும் வென்றவர்க் கணியார்

ஆனையின் ஈருரி யுடையார்

வஞ்சி நுண்ணிடை யுடையார்

வாழ்கொளி புத்தூ ருளாரே.  4

பரவு வாரையும் உடையார்

பழித்திகழ் வாரையும் உடையார்

விரவு வாரையும் உடையார்

வெண்டலைப் பலிகொள்வ துடையார்

அரவம் பூண்பதும் உடையார்

ஆயிரம் பேர்மிக வுடையார்

வரமும் ஆயிரம் உடையார்

வாழ்கொளி புத்தூ ருளாரே.  5

தண்டுந் தாளமுங் குழலுந்

தண்ணுமைக் கருவியும் புறவில்

கொண்ட பூதமும் உடையார்

கோலமும் பலபல வுடையார்

கண்டு கோடலும் அரியார்

காட்சியும் அரியதோர் கரந்தை

வண்டு வாழ்பதி யுடையார்

வாழ்கொளி புத்தூ ருளாரே.  6

மான வாழ்க்கைய துடையார்

மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்

தான வாழ்க்கைய துடையார்

தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த

ஞான வாழ்க்கைய துடையார்

நள்ளிருள் மகளிர்நின் றேத்த

வான வாழ்க்கைய துடையார்

வாழ்கொளி புத்தூ ருளாரே.  7

ஏழு மூன்றுமோர் தலைகள்

உடையவன் இடர்பட அடர்த்து

வேழ்வி செற்றதும் விரும்பி

விருப்பவர் பலபல வுடையார்

கேழல் வெண்பிறை யன்னகெழுமணி

மிடறுநின் றிலங்க

வாழி சாந்தமும் உடையார்

வாழ்கொளி புத்தூ ருளாரே.  8

வென்றி மாமல ரோனும்

விரிகடல் துயின்றவன் தானும்

என்றும் ஏத்துகை யுடையார்

இமையவர் துதிசெய விரும்பி

முன்றில் மாமலர் வாசம்

முதுமதி தவழ்பொழில் தில்லை

மன்றி லாடல துடையார்

வாழ்கொளி புத்தூ ருளாரே.  9

மண்டை கொண்டுழல் தேரர்

மாசுடை மேனிவன் சமணர்

குண்டர் பேசிய பேச்சுக்

கொள்ளன்மின் திகழொளி நல்ல

துண்ட வெண்பிறை சூடிச்

சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்

வண்டு வாழ்பொழில் சூழ்ந்த

வாழ்கொளி புத்தூ ருளாரே.  10

நலங்கொள் பூம்பொழிற் காழி

நற்றமிழ் ஞான சம்பந்தன்

வலங்கொள் வெண்மழு வாளன்

வாழ்கொளி புத்தூரு ளானை

இலங்கு வெண்பிறை யானை

யேத்திய தமிழிவை வல்லார்

நலங்கொள் சிந்தைய ராகி

நன்னெறி யெய்துவர் தாமே.

Sundarar (07.057):

தலைக்க லன்றலை மேல்தரித் தானைத்

தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்

கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்

கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை

அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை

ஆணை யால்அடி யேன்அடி நாயேன்

மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  1

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்

பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்

கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்

காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்

சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்

தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை

மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  2

வெந்த நீறுமெய் பூசவல் லானை

வேத மால்விடை ஏறவல் லானை

அந்தம் ஆதிஅறி தற்கரி யானை

ஆறலைத் தசடை யானைஅம் மானைச்

சிந்தை யென்றடு மாற்றறுப் பானைத்

தேவ தேவனென் சொல்முனி யாதே

வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  3

தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்

தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்

படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப்

பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை

நடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானை

நஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை

மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  4

வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்

மார னார்உடல் நீறெழச் செற்றுத்

துளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை

தோலும்நூ லுந்துதைந் தவரை மார்பன்

திளைக்குந் தெவ்வர் திரிபுரம் மூன்றும்

அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ

வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  5

திருவின் நாயகன் ஆகிய மாலுக்

கருள்கள் செய்திடும் தேவர் பிரானை

உருவி னானைஒன் றாவறி வொண்ணா

மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்

செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று

செங்கண் வேடனாய் என்னொடும் வந்து

மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  6

எந்தை யைஎந்தை தந்தை பிரானை

ஏத மாயஇடர் தீர்க்கவல் லானை

முந்தி யாகிய மூவரின் மிக்க

மூர்த்தி யைமுதற் காண்பரி யானைக்

கந்தின் மிக்ககரி யின்மருப் போடு

கார கில்கவ ரிம்மயிர் மண்ணி

வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  7

தேனை ஆடிய கொன்றையி னானைத்

தேவர் கைதொழுந் தேவர் பிரானை

ஊனம் ஆயின தீர்க்க வல்லானை

ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்

கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த

கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய

வான நாடனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  8

காளை யாகி வரையெடுத் தான்றன்

கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்

மூளை போத ஒருவிரல் வைத்த

மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்

பாளை தெங்கு பழம்விழ மண்டிச்

செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்

வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  9

திருந்த நான்மறை பாடவல் லானைத்

தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்

பொருந்த மால்விடை ஏறவல் லானைப்

பூதிப் பைபுலித் தோலுடை யானை

இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்

ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்

மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  10

மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை

மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்

பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்

புனித னைப்புலித் தோலுடை யானைச்

செய்ய னைவெளி யதிரு நீற்றில்

திகழு மேனியன் மான்மறி ஏந்தும்

மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  11

வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென்

றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்

சடையன் காதலன் வனப்பகை அப்பன்

நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்

நங்கை சிங்கடி தந்தை பயந்த

பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்

பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே.  12