Wednesday, January 4, 2023

Patteeswarar Temple, Perur – Literary Mention

Patteeswarar Temple, Perur – Literary Mention

The temple finds mention in Devara hymns of Appar, Sundarar and Sambandar Nayanmars. Nayanmars were group of 63 saints living in Tamil Nadu during the 6th to 8th centuries CE who were devoted to the Lord Shiva. Hence, the temple is considered as Thevara Vaippu Sthalam. The temple also finds mention in Thirukovaiyar of Manickavasagar, 9th century Tamil poet who wrote famous Thiruvasagam and minister to the Pandya king Varaguna Varman II. Lord Murugan of this temple is praised in Thirupugazh Hymns of Arunagirinathar,  a 15th century CE Tamil saint poet. Perur Puranam was written by Thiruvavaduthurai Adheenam Kaviraksha Kachiyappa Munivar

Sambandar (02.039):

ஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம்

வடகச்சியு மச்சிறு பாக்கம் நல்ல

கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி

கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்

நீரூர் வயல்நின்றியூர் குன்றியூருங்

குருகா வையூர் நாரையூர் நீடுகானப்

பேரூர்நன் னீள்வயல் நெய்த்தானமும்

பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே.

Appar (06.007):

சிந்தும் புனற்கெடில வீரட்டமுந்

திருவாஞ் சியமுந் திருநள்ளாறும்

அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்

ஆக்கூரு மாவூரு மான்பட்டியும்

எந்தம் பெருமாற் கிடமாவது

இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்

கந்தங் கமழுங் கரவீரமுங்

கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.

Appar (06.051):

அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்

ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்

தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்

சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்

நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்

நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்

வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்

வீழி மிழலையே மேவி னாரே.

Appar (06.070):

ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும்

ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்

பேரூர் பிரமபுரம் பேரா வூரும்

பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்

கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்

கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்

காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்

கயிலாய நாதனையே காண லாமே.

Sundarar (07.047):

ஆரூர் அத்தா ஐயாற் றமுதே

அளப்பூர் அம்மானே

காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற்

கருகா வூரானே

பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான்

பிறவா நெறியானே

பாரூர் பலரும் பரவப் படுவாய்

பாசூ ரம்மானே.

Sundarar (07.090):

பாரூரும் அரவல்குல் உமைநங்கை

யவள்பங்கன் பைங்கண் ஏற்றன்

ஊரூரன் தருமனார் தமர்செக்கில்

இடும்போது தடுத்தாட் கொள்வான்

ஆரூரன் தம்பிரான் ஆரூரன்

மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்

பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்

றம்பலத்தே பெற்றா மன்றே.