Uma Maheswarar Temple,
Konerirajapuram – Literary Mention
This temple is considered as one of the shrines of the 276 Paadal Petra Sthalams glorified in the early
medieval Thevaram hymns. This temple is the 151st Devara Paadal Petra Shiva Sthalam and 34th sthalam on the south side of river Cauvery in Chozha Nadu. Thirugnana Sambandar and Appar had sung hymns in
praise of Lord Shiva of this temple. The temple finds
mention in Periyapuranam written by Sekkizhar. Vallalar also has sung hymns in
praise of Lord Shiva of this temple.
Sambandar (01.085):
கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே. 1
தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே. 2
அந்தி மதியோடும் அரவச் சடைதாழ
முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே. 3
குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே. 4
மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே. 5
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே. 6
அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே. 7
பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணா தெடுத்தானை யிறையே விரலூன்றி
நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே. 8
நாகத் தணையானும் நளிர்மா மலரானும்
போகத் தியல்பினாற் பொலிய அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே. 9
குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே. 10
நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.
Appar (05.043):
கொல்லத் தான்நம
னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய
லாவதென் ஏழைகாள்
நல்லத் தான்நமை
யாளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி
ரேற்றுயர் தீருமே. 1
பொக்கம் பேசிப்
பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை
சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி
தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம்
நண்ணுதல் நன்மையே. 2
பிணிகொள் வார்குழற்
பேதையர் காதலாற்
பணிகள் மேவிப்
பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டில்
அரனெறி யாவது
நணுகு நாதன்
நகர்திரு நல்லமே. 3
தமக்கு நல்லது
தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும்
இராதிக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன்
றானுறை யும்பதி
நமக்கு நல்லது
நல்ல மடைவதே. 4
உரைத ளர்ந்துட
லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை
யானிடம் நல்லமே
பரவு மின்பணி
மின்பணி வாரொடே
விரவு மின்விர
வாரை விடுமினே. 5
அல்ல லாகஐம்
பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு
சிவாய நமவென்று
நல்லம் மேவிய
நாத னடிதொழ
வெல்ல வந்த
வினைப்பகை வீடுமே. 6
மாத ராரொடு
மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப்
பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய
நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு
மின்புக லாகுமே. 7
வெம்மை யான
வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய
சிவகதி சேரலாஞ்
சும்மை யார்மலர்
தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை
யானிடம் நல்லமே. 8
கால மான
கழிவதன் முன்னமே
ஏலு மாறு
வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல
ரானொடு மாமறை
நாலும் வல்லவர்
கோனிடம் நல்லமே. 9
மல்லை மல்கிய
தோளரக் கன்வலி
ஒல்லை யில்லொழித்
தானுறை யும்பதி
நல்ல நல்லம்
எனும்பெயர் நாவினாற்
சொல்ல வல்லவர்
தூநெறி சேர்வரே.