Thursday, July 1, 2021

Thiru Parameswara Vinnagaram, Kanchipuram – Literary Mention

Thiru Parameswara Vinnagaram, Kanchipuram – Literary Mention

This temple is revered in Nalayira Divya Prabandham, the 7th – 9th century CE Vaishnava canon by Thirumangai Alvar in 10 hymns. The temple is classified as a Divyadesam, one of the 108 Vishnu temples that are mentioned in the Vaishnava canon. The temple is one of the fourteen Divyadesams located in Kanchipuram and is part of Vishnu Kanchi, the place where most of the Vishnu temples in Kanchipuram are located. The temple is also revered in the verses of Divya Kavi Pillai Perumal Iyengar.

Thirumangai Azhwar Hymns (1127 – 1136):

1127 சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய்
     
சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய்
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு
     
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில்
     
பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த
     
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (1)

1128 கார் மன்னு நீள் விசும்பும் கடலும்
     
சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்-
     
தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில்
     
செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த
     
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (2)

1129 உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்
     
ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்
வரம் தரு மா மணிவண்ணன் இடம்
      -
மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்
     
நெடு வாயில் உக செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த
     
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (3)

1130 அண்டமும் எண் திசையும் நிலனும்
     
அலை நீரொடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம்
      -
ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே
     
விரைந்தார் இரிய செருவில் முனிந்து
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த
     
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (4)

1131 தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்
     
துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு
     
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்
     
திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
     
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (5)

1132 திண் படைக் கோளரியின் உரு ஆய்
     
திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம்-
     
பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப
     
விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த
பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
     
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (6)

1133 இலகிய நீள் முடி மாவலி-தன்
     
பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு
     
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
உலகு உடை மன்னவன் தென்னவனைக்
     
கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ
பல படை சாய வென்றான் பணிந்த
     
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (7)

1134 குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால்
     
குரங்கைப் படையா மலையால் கடலை
அடைத்தவன் எந்தை பிரானது இடம்-
     
அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்
     
வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த
படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த
     
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (8)

1135 பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து
     
முன்னே ஒருகால் செருவில் உருமின்
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு
     
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
கறை உடை வாள் மற மன்னர் கெட
     
கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்
பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த
     
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (9)

1136 பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன்
     
பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்
     
தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்
     
திரு மா மகள்-தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்
     
செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே (10)