Tuesday, November 30, 2021

Loganatha Perumal Temple, Thirukannangudi – Literary Mention

Loganatha Perumal Temple, Thirukannangudi – Literary Mention

The temple is revered in Nalayira Divya Prabandham, the 7th – 9th century Vaishnava canon, by Thirumangai Alwar in 10 hymns. Hence, the temple is classified as a Divyadesam, one of the 108 Vishnu temples that are mentioned in the book. Manavala Mamunigal had done Mangalasasanam on this Perumal.

1748:

வங்கமாமுந்நீர்வரிநிறப்பெரிய 
வாளரவினணைமேவி *
சங்கமார்அங்கைத்தடமலருந்திச் 
சாமமாமேனிஎன்தலைவன் *
அங்கமாறுஐந்துவேள்விநால்வேதம் 
அருங்கலைபயின்று * எரிமூன்றும் 
செங்கையால்வளர்க்கும்துளக்கமில்மனத்தோர் 
திருக்கண்ணங்குடியுள்நின் றானே.

1749:

கவளமாகதத்தகரியுய்யப் பொய்கைக் 
கராம்கொளக்கலங்கி * உள்நினைந்து 
துவள மேல்வந்துதோன்றி வன்முதலை 
துணிபடச்சுடுபடைதுரந்தோன் *
குவளைநீள்முளரிகுமுதம்ஒண்கழுநீர் *
கொய்ம்மலர்நெய்தலொண்கழனி *
திவளும்மாளிகைசூழ்செழுமணிப்புரிசைத் 
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

1750:

வாதைவந்தடரவானமும்நிலனும் 
மலைகளும்அலைகடல்குளிப்ப *
மீதுகொண்டுகளும்மீனுருவாகி 
விரிபுனல்வரியகட்டொளித்தோன் *
போதலர்புன்னைமல்லிகைமௌவல் 
புதுவிரைமதுமலரணைந்து *
சீதவொண்தென்றல்திசைதொறும்கமழும் 
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

1751:

வென்றிசேர்திண்மைவிலங்கல்மாமேனி
வெள்ளெயிற்றொள்ளெரித்தறுகண் *
பன்றியாய்அன்றுபார்மகள்பயலை
தீர்த்தவன் பஞ்சவர்பாகன் *
ஒன்றலாஉருவத்துஉலப்பில்காலத்து
உயர்கொடிஒளிவளர்மதியம் *
சென்றுசேர்சென்னிச்சிகரநன்மாடத்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

1752:

மன்னவன்பெரியவேள்வியில்குறளாய் 
மூவடிநீரொடும்கொண்டு *
பின்னும்ஏழுலகும்ஈரடியாகப் 
பெருந்திசையடங்கிடநிமிர்ந்தோன் *
அன்னமென்கமலத்தணிமலர்ப்பீடத்து 
அலைபுனலிலைக்குடைநீழல் *
செந்நெலொண்கவரியசையவீற்றிருக்கும் 
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

1753:

மழுவினால்அவனிஅரசைமூவெழுகால்
மணிமுடிபொடிபடுத்து * உதிரக்
குழுவுவார்புனலுள்குளித்து வெங்
கோபம்தவிர்ந்தவன், குலைமலிகதலி *
குழுவும்வார்கமுகும்குரவும்நற்பலவும்
குளிர்தருசூதம்மாதவியும் *
செழுமையார்பொழில்கள்தழுவுநன்மாடத்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

1754:

வானுளாரவரைவலிமையால்நலியும் 
மறிகடலிலங்கையார்கோனை *
பானுநேர்சரத்தால்பனங்கனிபோலப் 
பருமுடியுதிரவில்வளைத்தோன் *
கானுலாமயிலின்கணங்கள்நின்றாடக் 
கணமுகில்முரசம்நின்றதிர *
தேனுலாவரிவண்டுஇன்னிசைமுரலும் 
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

1755:

அரவுநீள்கொடியோன்அவையுள்ஆசனத்தை 
அஞ்சிடாதேயிட * அதற்குப் 
பெரியமாமேனிஅண்டமூடுருவப் 
பெருந்திசையடங்கிட நிமிர்ந்தோன் *
வரையின்மாமணியும்மரதகத்திரளும் 
வயிரமும்வெதிருதிர்முத்தும் *
திரைகொணர்ந்துந்திவயல்தொறும்குவிக்கும் 
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

1756:

பன்னியபாரம்பார்மகட்குஒழியப் 
பாரதமாபெரும்போரில் *
மன்னர்கள்மடியமணிநெடுந்திண்தேர் 
மைத்துனற்குஉய்த்தமாமாயன் *
துன்னுமாதவியும்சுரபுனைப்பொழிலும் 
சூழ்ந்தெழுசெண்பகமலர்வாய் *
தென்னவென்றுஅளிகள்முரன்றிசைபாடும் 
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

1757:

கலையுலாவல்குல்காரிகைதிறத்துக் 
கடல்பெரும்படையொடும்சென்று *
சிலையினால்இலங்கைதீயெழச்செற்ற 
திருக்கண்ணங்குடியுள்நின்றானை *
மலைகுலாமாடமங்கையர்தலைவன் 
மானவேல்கலியன்வாயொலிகள் *
உலவுசொல்மாலைஒன்பதோடொன்றும் 
வல்லவர்க்குஇல்லைநல்குரவே.