Mayuranathaswami Temple,
Mayiladuthurai – Literary Mention
This Temple is considered as one of the shrines of the 276 Paadal Petra Sthalams glorified in the early
medieval Thevaram hymns. This Temple is the 156th Devara Paadal Petra Shiva
Sthalam and 39th sthalam
on the south side of river Cauvery in Chozha Nadu. Thirugnana Sambandar and Appar has sung hymns in praise of Lord Shiva of this temple. Thiru Gnana Sambandar has
praised the Lord in the 1st and 3rd Thirumurai while
Appar has sung praise in the 5th and 6th Thirumurai.
Sekkizhar in his Periya Puranam refers to Sundarar visiting
this
temple and having bath in the Cauvery. Arunagirinathar has
praised Lord Muruga of this
temple in his Thirupugazh Hymns. Muthuswami Deekshitar has composed 9
Keerthanais on the Ambika of this
temple as per an inscription at the temple. Maha Vidwan Meenakshi
Sundaram Pillai composed the Sthala Puranam of this
temple, Abhayambikai Malai and Abhayambikai Andhadhi.
Sambandar (01.038):
கரவின் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே. 1
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே. 2
ஊனத் திருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண் டடிபேணுந்
தேனொத் தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே. 3
அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்
துஞ்சும் பிணியா யினதானே. 4
தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே. 5
தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே. 6
அணங்கோ டொருபா கம்அமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே. 7
சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலா டுதுறையே. 8
ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
கோலத் தயனும் மறியாத
சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே. 9
நின்றுண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே. 10
நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே.
Sambandar (03.070):
ஏனவெயி றாடரவொ டென்புவரி
யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய
படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின்
மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட
மூசுமயி லாடுதுறையே. 1
அந்தண்மதி செஞ்சடையர் அங்கணெழில்
கொன்றையொ டணிந்தழகராம்
எந்தம்அடி கட்கினிய தானமது
வேண்டில்எழி லார்பதியதாங்
கந்தமலி சந்தினொடு காரகிலும்
வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர்
சிந்துமயி லாடுதுறையே. 2
தோளின்மிசை வரியரவம் நஞ்சழல
வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது
காடுறையும் முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி
யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமணம்
நாறுமயி லாடுதுறையே. 3
ஏதமிலர் அரியமறை மலையர்மக
ளாகியஇ லங்குநுதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை
கின்றபெரு மானதிடமாங்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை
கூடிவரு காவிரியுளான்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி
கமழுமயி லாடுதுறையே. 4
பூவிரி கதுப்பின்மட மங்கையர
கந்தொறும் நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி
லும்பரமர் பழமையெனலாங்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி
சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி
கொள்ளுமயி லாடுதுறையே. 5
கடந்திகழ் கருங்களி றுரித்துமையும்
அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழும் மூவிலைநல் வேலுடைய
வேதியர் விரும்புமிடமாந்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு
தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக
நாறுமயி லாடுதுறையே. 6
அவ்வதிசை யாரும்அடி யாருமுள
ராகஅருள் செய்தவர்கள்மேல்
எவ்வமற வைகலும் இரங்கியெரி
யாடுமெம தீசனிடமாங்
கவ்வையொடு காவிரிக லந்துவரு
தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவிம யங்கிமணம்
நாறுமயி லாடுதுறையே. 7
இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினொ
டிருபதுதோள் நெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ
ரிருந்தவிடம் வினவுதிர்களேற்
கலங்கல்நுரை யுந்தியெதிர் வந்தகயம்
மூழ்கிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரிநி ரந்துபொழி
கின்றமயி லாடுதுறையே. 8
ஒண்டிறலின் நான்முகனும் மாலுமிக
நேடியுண ராதவகையால்
அண்டமுற அங்கியுரு வாகிமிக
நீண்டஅர னாரதிடமாங்
கெண்டையிரை கொண்டுகெளி றாருடனி
ருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டல்மணல் கெண்டிமட நாரைவிளை
யாடுமயி லாடுதுறையே. 9
மிண்டுதிறல் அமணரொடு சாக்கியரும்
அலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு
மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய
தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை கிளைக்கமது வந்தொழுகு
சோலைமயி லாடுதுறையே. 10
நிணந்தரும யானநில வானமதி
யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக
வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்
பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய்
வார்பெறுவர் பொன்னுலகமே.
Appar (05.039):
கொள்ளுங் காதன்மை
பெய்துறுங் கோல்வளை
உள்ளம் உள்கி
யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி
லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே. 1
சித்தந் தேறுஞ்
செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென்
பைங்கொடி பான்மதி
வைத்த மாமயி
லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி
கொன்றை கொடுக்கிலே. 2
அண்டர் வாழ்வும்
அமரர் இருக்கையுங்
கண்டு வீற்றிருக்
குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி
லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள்
சூடித் துதையிலே. 3
வெஞ்சி னக்கடுங்
காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும்
பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி
லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை
பங்கன் அருளிலே. 4
குறைவி லோங்கொடு
மானுட வாழ்க்கையாற்
கறைநி லாவிய
கண்டனெண் டோ ளினன்
மறைவ லான்மயி
லாடு துறையுறை
இறைவன் நீள்கழ
லேத்தி யிருக்கிலே. 5
நிலைமை சொல்லுநெஞ்
சேதவ மென்செய்தாய்
கலைக ளாயவல்
லான்கயி லாயநன்
மலையன் மாமயி
லாடு துறையன்நம்
தலையின் மேலும்
மனத்துளுந் தங்கவே. 6
நீற்றி னான்நிமிர்
புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை
யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயி
லாடு துறையென்று
போற்று வார்க்குமுண்
டோ புவி வாழ்க்கையே. 7
கோலும் புல்லும்
ஒருகையிற் கூர்ச்சமுந்
தோலும் பூண்டு
துயரமுற் றென்பயன்
நீல மாமயி
லாடு துறையனே
நூலும் வேண்டுமோ
நுண்ணுணர்ந் தோர்கட்கே. 8
பணங்கொ ளாடர
வல்குற் பகீரதி
மணங்கொ ளச்சடை
வைத்த மறையவன்
வணங்கு மாமயி
லாடு துறையரன்
அணங்கொர் பால்கொண்ட
கோலம் அழகிதே. 9
நீணி லாவர
வச்சடை நேசனைப்
பேணி லாதவர்
பேதுற வோட்டினோம்
வாணி லாமயி
லாடு துறைதனைக்
காணி லார்க்குங்
கடுந்துய ரில்லையே. 10
பருத்த தோளும்
முடியும் பொடிபட
இருத்தி னானவன்
இன்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி
லாடு துறைதொழுங்
கரத்தி னார்வினைக்
கட்டறுங் காண்மினே.