Friday, December 23, 2016

Parimala Ranganatha Perumal Temple, Thiruindaloor – Literary Mention

Parimala Ranganathar Temple, Thiruindalur – Literary Mention

The temple is revered in Nalayira Divya Prabandham, the 7th – 9th century Vaishnava canon, by Thirumangai Azhwar in eleven verses. The temple is classified as a Divyadesam, the 108 Vishnu temples that are revered in the Vaishnava canon, Nalayira Divya Prabandham.

Periya Thirumozhi:

1328:

நும்மைத்தொழுதோம் நுந்தம்பணிசெய்திருக்கும் நும்மடியோம் * இம்மைக்குஇன்பம்பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே! * எம்மைக்கடிதாக்கருமம்அருளி ஆவாஎன்றிரங்கி * 
நம்மைஒருகால்காட்டிநடந்தால் நாங்கள்உய்யோமே? (2)

1329:

சிந்தைதன்னுள் நீங்காதிருந்ததிருவே மருவினிய 
மைந்தா! * அந்தணாலிமாலேசோலைமழகளிறே! *
நந்தாவிளக்கின்சுடரேநறையூர்நின்றநம்பீ! * என் 
எந்தாய்இந்தளூராய்அடியேற்குஇறையும் இரங்காயே. (2)

1330:

பேசுகின்றதுஇதுவே வையம்ஈரடியாலளந்த 
மூசிவண்டுமுரலும கண்ணிமுடியீர்! * உம்மைக்காணும் 
ஆசையென்னும்கடலில்வீழ்ந்து இங்கு அயர்த்தோம் * அயலாரும் ஏசுகின்றதுஇதுவேகாணும் இந்தளூரீரே!

1331:

ஆசைவழுவாதேத்தும் எமக்கிங்கிழுக்காய்த்து * அடியோர்க்கு தேசமறிய உமக்கே ஆளாய்த்திரிகின்றோமுக்கு * 
காசினொளியில்திகழும்வண்ணம் காட்டீர் எம்பெருமான்! * வாசிவல்லீர்இந்தளூரீர்வாழ்ந்தேபோம்நீரே!

1332:

தீஎம்பெருமான்நீர்எம்பெருமான் திசையும்இருநிலனு 
மாய் * எம்பெருமானாகிநின்றால் அடியோம்காணோமால் * தாயெம்பெருமான் தந்தைதந்தையாவீர் * அடியோமுக்
கேஎம்பெருமானல்லீரோநீர் இந்தளூரீரே!

1333:

சொல்லாதொழியகில்லேன் அறிந்தசொல்லில் * நும்மடியர்
எல்லாரோடும்ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை * 
நல்லர்அறிவீர்தீயார் அறிவீர் நமக்குஇவ் வுலகத்தில் * 
எல்லாம்அறிவீர் ஈதே அறியீர்இந்தளூரீரே!

1334:

மாட்டீரானீர்பணி நீர் கொள்ள எம்மைப் பணியறியா 
விட்டீர் * இதனைவேறே சொன்னோம் இந்தளூரீரே! * 
காட்டீரானீர் நுந்தமடிக்கள் காட்டில் * உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே?

1335:

முன்னைவண்ணம்பாலின்வண்ணம்முழுதும்நிலைநின்ற *
பின்னைவண்ணம்கொண்டல்வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் * பொன்னின்வண்ணம்மணியின்வண்ணம் புரையும் திருமேனி * இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரீரே!

1336:

எந்தைதந்தை தம்மானென்றென்று எமரேழேளவும் * 
வந்துநின்றதொண்டரோர்க்கே வாசிவல்லீரால் * 
சிந்தைதன்னுள்முந்திநிற்றிர் சிறிதும்திருமேனி * 
இந்தவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரீரே!

1337:

ஏரார்பொழில்சூழ் இந்தளூரில்எந்தைபெருமானை * 
காரார்புறவில்மங்கைவேந்தன் கலியனொலிசெய்த * 
சீராரின்சொல்மாலை கற்றுத்திரிவார்உலகத்தில் 
ஆராரவரே அமரர்க்குஎன்றும் அமரராவாரே. (2)

Periya Thirumadal (2674.126):

அன்னவுருவினரியை * திருமெய்யத்து 
இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை *