Friday, September 24, 2021

Veeratteswarar Temple, Vazhuvur – Literary Mention

Veeratteswarar Temple, Vazhuvur – Literary Mention

The Temple is considered as Thevara Vaippu Sthalam as Devaram hymns sung by Appar had a mention about this Temple. The Temple is mentioned in 6th Thirumurai in 70th Patikam in 8th Song and 6th Thirumurai in 71st Patikam in 2nd Song. Saint Arunagirinathar had sung Thirupugazh Hymns on Lord Murugan of this Temple. The Temple had been sung by Tirumoolar in his Thirumandiram.

6-70-8:

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்

உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்

மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்

வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்

வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா

வேதிச்சுரம் விவீச்சுரம் வொற்றி யூருங்

கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்

கயிலாய நாதனையே காண லாமே.  8

6-71-2:

காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்

கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை

மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்

வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாங்

கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்

கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி

நாவினவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்

நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே.  2