Friday, July 5, 2019

Vaidyanatha Swami Temple, Vaitheeswaran Koil – Literary Mention

Vaidyanatha Swami Temple, Vaitheeswaran Koil – Literary Mention
Several literary works and scared hymns praise the glory of this temple. The temple is revered by the Devaram hymns of 7th Century Saiva Nayanmars -Tamil saint poets and is also classified as a Padal Petra Sthalam (temple revered by the Nayanmars). Appar and Sambandar had sung hymns in praise of Lord Shiva of this Temple. The hymns appear to recognize the function of the mantras (sacred text) as invocation of Shiva. In addition, the hymns from Tirunavukkarasar likens Shiva to luminous objects - a flame, a pearl, a diamond and pure gold. He also indicates wasting lot of days not worshipping Shiva at this temple. This is the 70th Devaram Padal Petra Shiva Sthalam and 16th Sthalam on the North side of River Cauvery in Chozha Naadu.
Sambandar:
02.043 கள்ளார்ந்த பூங்கொன்றை:
கள்ளார்ந்த பூங்கொன்றை
மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடிஎம்
பெருமானார் உறையுமிடம்
தள்ளாய சம்பாதி
சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம்
புள்ளிருக்கு வேளூரே.  1
தையலாள் ஒருபாகஞ்
சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோர்
அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை
மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான்
புள்ளிருக்கு வேளூரே.  2
வாசநலஞ் செய்திமையோர்
நாடோறும் மலர்தூவ
ஈசனெம் பெருமானார்
இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங்
கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான்
புள்ளிருக்கு வேளூரே.  3
மாகாயம் பெரியதொரு
மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த
எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும்
இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.  4
கீதத்தை மிகப்பாடும்
அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற
பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால்
வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான்
புள்ளிருக்கு வேளூரே.  5
திறங்கொண்ட அடியார்மேல்
தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம்
உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன்
வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான்
புள்ளிருக்கு வேளூரே.  6
அத்தியின்ஈ ருரிமூடி
அழகாக அனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும்
பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப்
பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான்
புள்ளிருக்கு வேளூரே.  7
பண்ணொன்ற இசைபாடும்
அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும்
மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி
வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.  8
வேதித்தார் புரமூன்றும்
வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி
கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன
அகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான்
புள்ளிருக்கு வேளூரே.  9
கடுத்துவருங் கங்கைதனைக்
கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார்
தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன்
மலங்கச்சென் றிராமற்காய்ப்
புடைத்தவனைப் பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.  10
செடியாய வுடல்தீர்ப்பான்
தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த
புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழில்காழிக்
கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க்
கில்லையாம் மறுபிறப்பே.
Appar:
05.079 வெள்ளெ ருக்கர:
வெள்ளெ ருக்கர
வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே
ளூரரன் பொற்கழல்
உள்ளி ருக்கு
முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர்
நரகக் குழியிலே.  1
மாற்ற மொன்றறி
யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக்
கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேற்
புள்ளிருக் குவேளூர்
சீற்ற மாயின
தேய்ந்தறுங் காண்மினே.  2
அரும றையனை
ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக
வுண்டவெங் கண்டனைப்
புரிவெண் ணூலனைப்
புள்ளிருக் குவேளூர்
உருகி நைபவர்
உள்ளங் குளிருமே.  3
தன்னு ருவை
யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை
மேனிவெண் ணீற்றனைப்
பொன்னு ருவனைப்
புள்ளிருக் குவேளூர்
என்ன வல்லவர்க்
கில்லை யிடர்களே.  4
செங்கண் மால்பிர
மற்கு மறிவொணா
அங்கி யின்னுரு
வாகி அழல்வதோர்
பொங்க ரவனைப்
புள்ளிருக் குவேளூர்
மங்கை பாகனை
வாழ்த்த வருமின்பே.  5
குற்ற மில்லியைக்
கோலச் சிலையினாற்
செற்ற வர்புரஞ்
செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப்
புள்ளிருக் குவேளூர்
பற்ற வல்லவர்
பாவம் பறையுமே.  6
கையி னோடுகால்
கட்டி யுமரெலாம்
ஐயன் வீடினன்
என்பதன் முன்னம்நீர்
பொய்யி லாவரன்
புள்ளிருக் குவேளூர்
மையு லாவிய
கண்டனை வாழ்த்துமே.  7
உள்ளம் உள்கி
உகந்து சிவனென்று
மெள்ள வுள்க
வினைகெடும் மெய்ம்மையே
புள்ளி னார்பணி
புள்ளிருக் குவேளூர்
வள்ளல் பாதம்
வணங்கித் தொழுமினே.  8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று  9
அரக்க னார்தலை
பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப்
பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை
புள்ளிருக் குவேளூர்
விருப்பி னாற்றொழு
வார்வினை வீடுமே.
06.054 ஆண்டானை அடியேனை:
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  1
சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  2
பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  3
இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி
இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  4
மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  5
அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  6
நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா
இறையவனை எனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  7
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  8
பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  9
இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  10
Thirupugazh:
Lord Muruga of this Temple had been praised by Saint Arunagirinathar in his Thirupugazh Hymns.

Other Literary Works:
The glory of the Lord of the temple is praised by a host of saints and pundits as Arunagirinathar, Kumara Gurubarar, Chidambara Munivar, Ramalinga Adigal, Padikasu Tambiran, Kalamegha Pulavar and Vaduganatha Desikar of Dharumapura Aadheenam.