Sunday, November 17, 2019

Ekambareswarar Temple, Kanchipuram – Sambandar Thevaram Hymns

Ekambareswarar Temple, Kanchipuram – Sambandar Thevaram Hymns
01.133:
வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி
நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற்
கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற
அணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய ஏகம்பந்தொழு
தேத்த இடர்கெடுமே.  1
வரந்திகழு மவுணர் மாநகர்மூன்
றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச்
சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா
தவிநல்ல குராமரவந்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ்
சேர விடர்கெடுமே.  2
வண்ணவெண் பொடிப்பூசு மார்பின்
வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய
பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி
விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ்
சேர விடர்கெடுமே.  3
தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற்
சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த
கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற்
கச்சி மாநகருள்
ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம்
ஏத்த விடர்கெடுமே.  4
தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத்
தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப்
பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி
மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ்
சேர விடர்கெடுமே.  5
சாகம்பொன் வரையாகத் தானவர்
மும்மதில் சாயவெய்
தாகம்பெண் ணொருபாக மாக
அரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற்
கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி
யேத்த விடர்கெடுமே.  6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7
வாணிலா மதிபுல்கு செஞ்சடை
வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி
நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா அரக்கன்றன் நீள்முடி
பத்தும் இறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ்
சேர விடர்கெடுமே.  8
பிரமனுந் திருமாலுங் கைதொழப்
பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை அந்தணன்
அணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக்
கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ
வில்வினை மாய்ந்தறுமே.  9
குண்டுபட் டமணா யவரொடுங்
கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை
யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை
ஒன்றி னாலவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங்
காண விடர்கெடுமே.  10
ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி
யேகம்பம் மேயவனை
காரினார் மணிமாட மோங்கு
கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன்
பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ
ரோடுஞ் சேர்பவரே.  11
02.012:
மறையானை மாசிலாப்
புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா
ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்கச்
சித்திரு வேகம்பத்
துறைவானை யல்லதுள்
காதென துள்ளமே.  1
நொச்சியே வன்னிகொன்
றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே
டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே
யகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்நும்
மேல்வினை நையுமே.  2
பாராரு முழவமொந்
தைகுழல் யாழொலி
சீராலே பாடலா
டல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே
கம்பனை யெம்மானைச்
சேராதார் இன்பமா
யந்நெறி சேராரே.  3
குன்றேய்க்கு நெடுவெண்மா
டக்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கு முகில்கள்
தோயும் வியன் கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீ
ரான்மலி யேகம்பம்
சென் றேய்க்குஞ்
சிந்தையார் மேல்வினை சேராவே.  4
சடையானைத் தலைகையேந்
திப்பலி தருவார்தம்
கடையேபோய் மூன்றுங்கொண்
டான்கலிக் கச்சியுள்
புடையேபொன் மலருங்கம்
பைக்கரை யேகம்பம்
உடையானை யல்லதுள்
காதென துள்ளமே.  5
மழுவாளோ டெழில்கொள்சூ
லப்படை வல்லார்தம்
கெழுவாளோ ரிமையாருச்
சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ
ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுமியார்
மேல்வினை துன்னாவே.  6
விண்ணுளார் மறைகள்வே
தம்விரித் தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல்
வார்கரி காலனை
நண்ணுவா ரெழில்கொள்கச்
சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின்
றவலங் காரம்மே.  7
தூயானைத் தூயவா
யம்மறை யோதிய
வாயானை வாளரக்
கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச்
சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா
ரென்றலை மேலாரே.  8
நாகம்பூண் ஏறதே
றல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியுமேற்
பர்மறை பாடுவர்
ஏகம்பம் மேவியா
டுமிறை யிருவர்க்கும்
மாகம்பம் அறியும்வண்
ணத்தவ னல்லனே.  9
போதியார் பிண்டியா
ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம்
மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா
டுந்திரு வேகம்பம்
நீதியால் தொழுமின்நும்
மேல்வினை நில்லாவே.  10
அந்தண்பூங் கச்சியே
கம்பனை யம்மானைக்
கந்தண்பூங் காழியூ
ரன்கலிக் கோவையால்
சந்தமே பாடவல்
லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா
டக்கெடும் பாவமே.  11
03.041:
கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவா வினையே.  1
மதியார் கச்சி, நதியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே.  2
கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியா வினையே.  3
வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே.  4
படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையா வினையே.  5
நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே.  6
கரியின் னுரியன், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே.  7
இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.  8
மறையோன் அரியும், அறியா வனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே.  9
பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே.  10
கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.  11
03.114:
பாயுமால்விடை மேலொரு பாகனே
பாவைதன்னுரு மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே
சோதிமாலெரி வேதத் துவனியே
ஆயுநன்பொருள் நுண்பொரு ளாதியே
ஆலநீழல் அரும்பொரு ளாதியே
காயவின்மதன் பட்டது கம்பமே
கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே.  1
சடையணிந்ததும் வெண்டலை மாலையே
தம்முடம்பிலும் வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே
பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூத கணங்களே
போற்றிசைப்பன பூத கணங்களே
கடைகடோ றும் இரப்பது மிச்சையே
கம்பமேவி யிருப்பது மிச்சையே.  2
வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே
வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியே
அள்ளிநீறது பூசுவ தாகமே
யானமாசுண மூசுவ தாகமே
புள்ளியாடை யுடுப்பது கத்துமே
போனவூழி யுடுப்பது கத்துமே
கள்ளுலாமலர்க் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.  3
முற்றலாமை யணிந்த முதல்வரே
மூரியாமை யணிந்த முதல்வரே
பற்றிவாளர வாட்டும் பரிசரே
பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே
வானினோடு கலம்பலி தேர்வதே
கற்றிலாமனங் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.  4
வேடனாகி விசையற் கருளியே
வேலைநஞ்ச மிசையற் கருளியே
ஆடுபாம்பரை யார்த்த துடையதே
யஞ்சுபூதமு மார்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி யழகிதே
குற்றமின்மதிக் கண்ணி யழகிதே
காடுவாழ்பதி யாவது மும்மதே
கம்பமாபதி யாவது மும்மதே.  5
இரும்புகைக்கொடி தங்கழல் கையதே
இமயமாமகள் தங்கழல் கையதே
அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே
ஆழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகல்நட மாடுதல் செய்துமே
பேதைமார்மனம் வாடுதல் செய்துமே
கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.  6
முதிரமங்கை தவஞ்செய்த காலமே
முன்புமங்கை தவஞ்செய்த காலமே
வெதிர்களோடகில் சந்த முருட்டியே
வேழமோடகில் சந்த முருட்டியே
அதிரவாறு வரத்தழு வத்தொடே
ஆன்நெய்ஆடு வரத்தழு வத்தொடே
கதிர்கொள்பூண்முலைக் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.  7
பண்டரக்க னெடுத்த பலத்தையே
பாய்ந்தரக்க னெடுத்த பலத்தையே
கொண்டரக்கிய துங்கால் விரலையே
கோளரக்கிய துங்கால் விரலையே
உண்டுழன்றது முண்டத் தலையிலே
யுடுபதிக்கிட முண்டத் தலையிலே
கண்டநஞ்சம் அடக்கினை கம்பமே
கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.  8
தூணியான சுடர்விடு சோதியே
சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே
பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழூழி திரிந்துமே
சித்தமோடு கீழூழி திரிந்துமே
காணநின்றனர் உற்றது கம்பமே
கடவுள்நீயிடம் உற்றது கம்பமே.  9
ஓருடம்பினை யீருரு வாகவே
யுன்பொருட்டிற மீருரு வாகவே
ஆருமெய்தற் கரிது பெரிதுமே
ஆற்றவெய்தற் கரிது பெரிதுமே
தேரரும்மறி யாது திகைப்பரே
சித்தமும்மறி யாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே
கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.  10
கந்தமார்பொழில் சூழ்தரு கம்பமே
காதல்செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்து விரும்பிப் புகலியே
பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில்பொரு ளாயின கொண்டுமே
அண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின்னியல் பாடிய பத்துமே
பாடவல்லவ ராயின பத்துமே.