Thursday, December 22, 2016

Manathunai Nathar Temple, Valivalam – Literary Mention

Manathunai Nathar Temple, Valivalam – Literary Mention
The temple is praised in Thevaram hymns of saints Gnanasambandar, Appar and Sundarar. This is the 121st Shiva temple on the southern bank of Cauvery praised by saints. Arunagiri Nadhar sang Thirupugazh on Lord Murugan here.
Thirumurai 1.50 திருவலிவலம்
ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ளமொழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றனாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.
இயங்குகின்ற விரவிதிங்கண் மற்றுநற் றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பாற் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவலமே யவனே.
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றனாமங் காதலிக்கின்ற துள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவலமே யவனே.
மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே
நைவனாயே னுன்றனாமம் நாளும்நவிற் றுகின்றேன்
வையமுன்னே வந்துநல்காய் வலிவலமே யவனே.
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவனுன் றிறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் றாளிணைக்கீழ்ப் பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும்நினைந் தடியேன் வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார்மூ வெயிலும்
எரியவெய்தா யெம்பெருமா னென்றிமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் வலிவலமே யவனே.
தாயும்நீயே தந்தைநீயே சங்கரனே யடியேன்
ஆயும்நின்பா லன்புசெய்வா னாதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னு ளைவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடையபொன் மலையை வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனிரா வணனைத் தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிரலா லடர்த்த வாரொடுங்குங் கொங்கைபங்கா வலிவலமே யவனே.
ஆதியாய நான்முகனும் மாலுமறி வரிய
சோதியானே நீதியில்லேன் சொல்லுவனின் றிறமே
ஓதிநாளு முன்னையேத்து மென்னைவினை யவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவலமே யவனே.
பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ வலிவலமே யவனே.
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே மன்னியிருப் பாரே.

No comments: