Tuesday, September 24, 2019

Vijayanatheswarar Temple, Vijayamangai – Literary Mention

Vijayanatheswarar Temple, Vijayamangai – Literary Mention
The Temple is one of the shrines of the 275 Paadal Petra Shiva Sthalams glorified in the early medieval Thevaram poems by Tamil Saivite Nayanars Thirugnana Sambanthar and Tirunavukkarasar. This Temple is the 101st Devaram Paadal Petra Shiva Sthalam and 47th Sthalam on the north side of river Cauvery in Chozha Nadu. Saint Arunagirinathar had sung the glory of Lord Muruga in the temple in his Thirupugazh hymns.

03.017 – Thirugnana Sambandar:
மருவமர் குழலுமை
பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம்
அடிகள் கோயிலாங்
குரவமர் சுரபுன்னை
கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி
விசய மங்கையே.  1
கீதமுன் இசைதரக்
கிளரும் வீணையர்
பூதமுன் இயல்புடைப்
புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக்
குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு
விசய மங்கையே.  2
அக்கர வரையினர்
அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச்
சோதி தொன்னகர்
தக்கநல் வானவர்
தலைவர் நாடொறும்
மிக்கவர் தொழுதெழு
விசய மங்கையே.  3
தொடைமலி இதழியுந்
துன்எ ருக்கொடு
புடைமலி சடைமுடி
யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர்
பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல்
விசய மங்கையே.  4
தோடமர் காதினன்
துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோ
டினித மர்விடங்
காடமர் மாகரி
கதறப் போர்த்ததோர்
வேடம துடையணல்
விசய மங்கையே.  5
மைப்புரை கண்ணுமை
பங்கன் வண்டழல்
ஒப்புரை மேனியெம்
முடைய வன்னகர்
அப்பொடு மலர்கொடங்
கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி
விசய மங்கையே.  6
இரும்பொனின் மலைவிலின்
எரிச ரத்தினால்
வரும்புரங் களைப்பொடி
செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையுந்
தூய மத்தமும்
விரும்பிய சடையணல்
விசய மங்கையே.  7
உளங்கையி லிருபதோ
டொருப துங்கொடாங்
களந்தரும் வரையெடுத்
திடும்அ ரக்கனைத்
தளர்ந்துடல் நெரிதர
அடர்த்த தன்மையன்
விளங்கிழை யொடும்புகும்
விசய மங்கையே.  8
மண்ணினை யுண்டவன்
மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்களப்
பரிய அத்தனூர்
தண்ணறுஞ் சாந்தமும்
பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு
விசய மங்கையே.  9
கஞ்சியுங் கவளமுண்
கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன
நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத்
தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு
விசய மங்கையே.  10
விண்ணவர் தொழுதெழு
விசய மங்கையை
நண்ணிய புகலியுள்
ஞான சம்பந்தன்
பண்ணிய செந்தமிழ்
பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி
புகுதல் திண்ணமே. 11
05.071 – Tirunavukkarasar:
குசையும் அங்கையிற்
கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல
வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந்
தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள்
வேதியன் காண்மினே.  1
ஆதி நாதன்
அடல்விடை மேலமர்
பூத நாதன்
புலியத ளாடையன்
வேத நாதன்
விசயமங் கையுளான்
பாத மோதவல்
லார்க்கில்லை பாவமே.  2
கொள்ளி டக்கரைக்
கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள்
செய்விச யமங்கை
உள்ளி டத்துறை
கின்ற உருத்திரன்
கிள்ளி டத்தலை
யற்ற தயனுக்கே.  3
திசையு மெங்குங்
குலுங்கத் திரிபுரம்
அசைய வங்கெய்திட்
டாரழ லூட்டினான்
விசைய மங்கை
விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி
விழுந்தனன் காலனே.  4
பொள்ள லாக்கை
அகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கிக்
கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி
விசயமங் கைப்பிரான்
உள்ள நோக்கியெ
னுள்ளுள் உறையுமே.  5
கொல்லை யேற்றுக்
கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை
யான்விச யமங்கைச்
செல்வ போற்றியென்
பாருக்குத் தென்றிசை
எல்லை யேற்றலும்
இன்சொலு மாகுமே.  6
கண்பல் உக்கக்
கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழல்
உத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி
யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப்
பெற்றது நன்மையே.  7
பாண்டு வின்மகன்
பார்த்தன் பணிசெய்து
வேண்டு நல்வரங்
கொள்விச யமங்கை
ஆண்ட வன்னடி
யேநினைந் தாசையாற்
காண்ட லேகருத்
தாகி யிருப்பனே.  8
வந்து கேண்மின்
மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன்
விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை
வார்களைச் சிக்கெனப்
பந்து வாக்கி
உயக்கொளுங் காண்மினே.  9
இலங்கை வேந்தன்
இருபது தோளிற
விலங்கள் சேர்விர
லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும்
வாழ்த்திசைப் பார்களும்
நலஞ்செய் வாரவர்
நன்னெறி நாடியே. 10