Tuesday, August 11, 2020

Abathsahayeswarar Temple, Aduthurai – Literary Mention

Abathsahayeswarar Temple, Aduthurai – Literary Mention
This Temple is the 148th Devaram Paadal Petra Shiva Sthalam and 31st Sthalam on south side of Cauvery River in Chozha Nadu. Thirugnana Sambandar and Appar has sung hymns in praise of Lord Shiva of this temple. Saint Arunagirinathar has sang songs in praise of Lord Murugan of this temple in his revered Thirupugazh.
Sambandar Hymns (02.035):
பரவக் கெடும்வல்
வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட்
டிடைநின் றெரியாடி
அரவச் சடையந்
தணன்மேய அழகார்
குரவப் பொழில்சூழ்
குரங்கா டுதுறையே.  1
விண்டார் புரமூன்று
மெரித்த விமலன்
இண்டார் புறங்காட்
டிடைநின் றெரியாடி
வண்டார் கருமென்
குழல்மங் கையொர்பாகம்
கொண்டான் நகர்போல்
குரங்கா டுதுறையே.  2
நிறைவில் புறங்காட்
டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான்
மழுவேந் திநின்றாடி
மறையின் னொலிவா
னவர்தா னவரேத்தும்
குறைவில் லவனூர்
குரங்கா டுதுறையே.  3
விழிக்குந் நுதன்மே
லொருவெண் பிறைசூடித்
தெழிக்கும் புறங்காட்
டிடைசேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே
பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ்
குரங்கா டுதுறையே.  4
நீறார் தருமே
னியன்நெற் றியொர்கண்ணன்
ஏறார் கொடியெம்
மிறையீண் டெரியாடி
ஆறார் சடையந்
தணன்ஆ யிழையாளோர்
கூறான் நகர்போல்
குரங்கா டுதுறையே.  5
நளிரும் மலர்க்கொன்
றையுநா றுகரந்தைத்
துளிருஞ் சுலவிச்
சுடுகாட் டெரியாடி
மிளிரும் மரவார்த்
தவன்மே வியகோயில்
குளிரும் புனல்சூழ்
குரங்கா டுதுறையே.  6
பழகும் வினைதீர்ப்
பவன்பார்ப் பதியோடும்
முழவம் குழல்மொந்தை
முழங் கெரியாடும்
அழகன் னயில்மூ
விலைவேல் வலனேந்துங்
குழகன் நகர்போல்
குரங்கா டுதுறையே.  7
வரையார்த் தெடுத்தவ்
வரக்கன் வலியொல்க
நிரையார் விரலால்
நெரித்திட் டவனூராம்
கரையார்ந் திழிகா
விரிக்கோ லக்கரைமேல்
குரையார் பொழில்சூழ்
குரங்கா டுதுறையே.  8
நெடியா னொடுநான்
முகனுந் நினைவொண்ணாப்
படியா கியபண்
டங்கனின் றெரியாடி
செடியார் தலையேந்
தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியான் நகர்போல்
குரங்கா டுதுறையே.  9
துவரா டையர்வே
டமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழிகா
தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன்
அகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர்
குரங்கா டுதுறையே.  10
நல்லார் பயில்கா
ழியுள்ஞா னசம்பந்தன்
கொல்லே றுடையான்
குரங்கா டுதுறைமேல்
சொல்லார் தமிழ்மாலை
பத்துந் தொழுதேத்த
வல்லா ரவர்வா
னவரோ டுறைவாரே.  11
Appar Hymns (05.063):
இரங்கா வன்மனத்
தார்கள் இயங்குமுப்
புரங்கா வல்லழி
யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட
நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்கா டுதுறைக்
கோலக் கபாலியே.  1
முத்தி னைமணி
யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர்
சோதியைச் சோலைசூழ்
கொத்த லர்குரங்
காடு துறையுறை
அத்த னென்னஅண்
ணித்திட் டிருந்ததே.  2
குளிர்பு னற்குரங்
காடு துறையனைத்
தளிர்நி றத்தையல்
பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைந்
தேனுக்கென் உள்ளமுந்
தெளிவி னைத்தெளி
யத்தெளிந் திட்டதே.  3
மணவன் காண்மலை
யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை
ஞானிகள் காதலெண்
குணவன் காண்குரங்
காடு துறைதனில்
அணவன் காணன்பு
செய்யு மடியர்க்கே.  4
ஞாலத் தார்தொழு
தேத்திய நன்மையன்
காலத் தானுயிர்
போக்கிய காலினன்
நீலத் தார்மிடற்
றான்வெள்ளை நீறணி
கோலத் தான்குரங்
காடு துறையனே.  5
ஆட்டி னான்முன்
அமணரோ டென்றனைப்
பாட்டி னான்றன
பொன்னடிக் கின்னிசை
வீட்டி னான்வினை
மெய்யடி யாரொடுங்
கூட்டி னான்குரங்
காடு துறையனே.  6
மாத்தன் றான்மறை
யார்முறை யான்மறை
ஓத்தன் தாரகன்
றன்னுயி ருண்டபெண்
போத்தன் றானவன்
பொங்கு சினந்தணி
கூத்தன் றான்குரங்
காடு துறையனே.  7
நாடி நந்தம
ராயின தொண்டர்காள்
ஆடு மின்னழு
மின்தொழு மின்னடி
பாடு மின்பர
மன்பயி லும்மிடங்
கூடு மின்குரங்
காடு துறையையே.  8
தென்றல் நன்னெடுந்
தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல்
பொங்க விழித்தவன்
அன்ற வந்தக
னையயிற் சூலத்தாற்
கொன்ற வன்குரங்
காடு துறையனே.  9
நற்ற வஞ்செய்த
நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி
யாலருள் செய்தநற்
கொற்ற வன்குரங்
காடு துறைதொழப்
பற்றுந் தீவினை
யாயின பாறுமே.  10
கடுத்த தேரரக்
கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை
யிற்றல றவ்விரல்
அடுத்த லுமவன்
இன்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங்
காடு துறையனே.