Abathsahayeswarar Temple, Ponnur
– Literary Mention
This Temple is considered as one of the shrines of the 276 Paadal Petra Sthalams glorified in the early
medieval Thevaram hymns. Thirugnana Sambandar and Appar has sung
hymns in praise of Lord Shiva of this temple. This
Temple is the 76th Devara Paadal Petra Shiva Sthalam and 22nd sthalam on the north side of
river Cauvery in Chozha Nadu.
Sambandar (01.096):
மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
அன்னி யூரமர், மன்னு சோதியே. 1
பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. 2
நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்
சோதி நாமமே, ஓதி உய்ம்மினே. 3
பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்
சித்தர் தாள்தொழ, முத்த ராவரே. 4
நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே. 5
இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்
நன்பொ னென்னுமின், உம்ப ராகவே. 6
அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்
எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே. 7
தூர்த்தனைச் செற்ற, தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே யுய்ம்மினே 8
இருவர் நாடிய, அரவன் அன்னியூர்
பரவு வார்விண்ணுக், கொருவ ராவரே. 9
குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. 10
பூந்தராய்ப் பந்தன், ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே. 11
Appar (05.008):
பாற லைத்த
படுவெண் டலையினன்
நீற லைத்தசெம்
மேனியன் நேரிழை
கூற லைத்தமெய்
கோளர வாட்டிய
ஆற லைத்த
சடைஅன்னி யூரரே. 1
பண்டொத் தமொழி
யாளையோர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை
யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி
யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத்
தான்அன்னி யூரரே. 2
பரவி நாளும்
பணிந்தவர் தம்வினை
துரவை யாகத்
துடைப்பவர் தம்மிடங்
குரவம் நாறுங்
குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர்
போல்அன்னி யூரரே. 3
வேத கீதர்விண்
ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை
துன்று சடைக்கணி
நாதர் நீதியி
னாலடி யார்தமக்
காதி யாகிநின்
றார்அன்னி யூரரே. 4
எம்பி ரான்இமை
யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி
இருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை
போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின்
றார்அன்னி யூரரே. 5
வெந்த நீறுமெய்
பூசுநன் மேனியர்
கந்த மாமலர்
சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ
னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண்
டீர்அன்னி யூரரே. 6
ஊனை யார்தலை
யிற்பலி கொண்டுழல்
வானை வானவர்
தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ
லாளையொர் பாகமா
ஆனை யீருரி
யார்அன்னி யூரரே. 7
காலை போய்ப்பலி
தேர்வர் கண்ணார்நெற்றி
மேலை வானவர்
வந்து விரும்பிய
சோலை சூழ்புறங்
காடரங் காகவே
ஆலின் கீழறத்
தார்அன்னி யூரரே. 8
எரிகொள் மேனியர்
என்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில்
தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு
நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின்
றார்அன்னி யூரரே. 9
வஞ்ச ரக்கன்
கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ
ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர
லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென்
றார்அன்னி யூரரே. 10