Friday, October 30, 2020

Sara Parameswarar Temple, Thirucherai – Literary Mention

Sara Parameswarar Temple, Thirucherai – Literary Mention

The Temple is considered as one of the shrines of the 276 Paadal Petra Sthalams (Shiva Sthalams) glorified in the early medieval Thevaram poems by Tamil Saivite Nayanar Thirugnana Sambandar and Appar. This Temple is considered as the 212th Paadal Petra Shiva Sthalam and 95th Sthalam on the south side of river Cauvery in Chozha Nadu.

Sambandar (03.086):

முறியுறு நிறமல்கு முகிழ்முலை

மலைமகள் வெருவமுன்

வெறியுறு மதகரி யதள்பட

வுரிசெய்த விறலினர்

நறியுறும் இதழியின் மலரொடு

நதிமதி நகுதலை

செறியுறு சடைமுடி யடிகள்தம்

வளநகர் சேறையே.  1

புனமுடை நறுமலர் பலகொடு

தொழுவதொர் புரிவினர்

மனமுடை அடியவர் படுதுயர்

களைவதொர் வாய்மையர்

இனமுடை மணியினோ டரைசிலை

யொளிபெற மிளிர்வதோர்

சினமுதிர் விடையுடை யடிகள்தம்

வளநகர் சேறையே.  2



புரிதரு சடையினர் புலியதள்

அரையினர் பொடிபுல்கும்

எரிதரும் உருவினர் இடபம

தேறுவ ரீடுலா

வரிதரு வளையின ரவரவர்

மகிழ்தர மனைதொறுந்

திரிதரு சரிதையர் உறைதரு

வளநகர் சேறையே.  3

துடிபடும் இடையுடை மடவர

லுடனொரு பாகமா

இடிபடு குரலுடை விடையினர்

படமுடை யரவினர்

பொடிபடும் உருவினர் புலியுரி

பொலிதரும் அரையினர்

செடிபடு சடைமுடி யடிகள்தம்

வளநகர் சேறையே.  4

அந்தர முழிதரு திரிபுர

மொருநொடி யளவினில்

மந்தர வரிசிலை யதனிடை

யரவரி வாளியால்

வெந்தழி தரவெய்த விடலையர்

விடமணி மிடறினர்

செந்தழல் நிறமுடை யடிகள்தம்

வளநகர் சேறையே.  5

மத்தர முறுதிறன் மறவர்தம்

வடிவுகொ டுருவுடைப்

பத்தொரு பெயருடை விசயனை

அசைவுசெய் பரிசினால்

அத்திரம் அருளும்நம் அடிகள

தணிகிளர் மணியணி

சித்திர வளநகர் செறிபொழில்

தழுவிய சேறையே.  6

பாடினர் அருமறை முறைமுறை

பொருளென அருநடம்

ஆடினர் உலகிடை அலர்கொடும்

அடியவர் துதிசெய

வாடினர் படுதலை யிடுபலி

யதுகொடு மகிழ்தருஞ்

சேடர்தம் வளநகர் செறிபொழில்

தழுவிய சேறையே.  7

கட்டுர மதுகொடு கயிலைநல்

மலைநலி கரமுடை

நிட்டுரன் உடலொடு நெடுமுடி

யொருபதும் நெரிசெய்தார்

மட்டுர மலரடி யடியவர்

தொழுதெழ அருள்செயுஞ்

சிட்டர்தம் வளநகர் செறிபொழில்

தழுவிய சேறையே.  8

பன்றியர் பறவையர் பரிசுடை

வடிவொடு படர்தர

அன்றிய அவரவர் அடியொடு

முடியவை யறிகிலார்

நின்றிரு புடைபட நெடுவெரி

நடுவெயொர் நிகழ்தரச்

சென்றுயர் வெளிபட அருளிய

அவர்நகர் சேறையே.  9

துகடுறு விரிதுகில் உடையவர்

அமணெனும் வடிவினர்

விகடம துறுசிறு மொழியவை

நலமில வினவிடல்

முகிழ்தரும் இளமதி யரவொடும்

அழகுற முதுநதி

திகழ்தரு சடைமுடி யடிகள்தம்

வளநகர் சேறையே.  10

கற்றநன் மறைபயில் அடியவர்

அடிதொழு கவினுறு

சிற்றிடை யவளொடு மிடமென

வுறைவதொர் சேறைமேற்

குற்றமில் புகலியுள் இகலறு

ஞானசம் பந்தன

சொற்றக வுறமொழி பவரழி

விலர்துயர் தீருமே.

Appar (04.073):

பெருந்திரு இமவான் பெற்ற

பெண்கொடி பிரிந்த பின்னை

வருந்துவான் தவங்கள் செய்ய

மாமணம் புணர்ந்து மன்னும்

அருந்திரு மேனி தன்பால்

அங்கொரு பாக மாகத்

திருந்திட வைத்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.  1

ஓர்த்துள வாறு நோக்கி

உண்மையை உணராக் குண்டர்

வார்த்தையை மெய்யென் றெண்ணி

மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்

பேர்த்தெனை ஆளாக் கொண்டு

பிறவிவான் பிணிக ளெல்லாந்

தீர்த்தருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.  2

ஒன்றிய தவத்து மன்னி

உடையனாய் உலப்பில் காலம்

நின்றுதங் கழல்க ளேத்தும்

நீள்சிலை விசய னுக்கு

வென்றிகொள் வேட னாகி

விரும்பிவெங் கான கத்துச்

சென்றருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.  3

அஞ்சையும் அடக்கி ஆற்ற

லுடையனாய் அநேக காலம்

வஞ்சமில் தவத்துள் நின்று

மன்னிய பகீர தற்கு

வெஞ்சின முகங்க ளாகி

விசையொடு பாயுங் கங்கைச்

செஞ்சடை யேற்றார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.  4

நிறைந்தமா மணலைக் கூப்பி

நேசமோ டாவின் பாலைக்

கறந்துகொண் டாட்டக் கண்டு

கறுத்ததன் தாதை தாளை

எறிந்தமா ணிக்கப் போதே

எழில்கொள்சண் டீசன் என்னச்

சிறந்தபே றளித்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.  5

விரித்தபல் கதிர்கொள் சூலம்

வெடிபடு தமரு கங்கை

தரித்ததோர் கோல காலப்

பயிரவ னாகி வேழம்

உரித்துமை யஞ்சக் கண்டு

ஒண்டிரு மணிவாய் விள்ளச்

சிரித்தருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.  6

சுற்றுமுன் இமையோர் நின்று

தொழுதுதூ மலர்கள் தூவி

மற்றெமை உயக்கொள் என்ன

மன்னுவான் புரங்கள் மூன்றும்

உற்றொரு நொடியின் முன்னம்

ஒள்ளழல் வாயின் வீழச்

செற்றருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.  7

முந்தியிவ் வுலக மெல்லாம்

படைத்தவன் மாலி னோடும்

எந்தனி நாத னேயென்

றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய

அந்தமில் சோதி தன்னை

அடிமுடி யறியா வண்ணஞ்

செந்தழ லானார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.  8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று  9

ஒருவரும் நிக ரிலாத

ஒண்டிறல் அரக்கன் ஓடிப்

பெருவரை யெடுத்த திண்டோ ள்

பிறங்கிய முடிகள் இற்று

மருவியெம் பெருமா னென்ன

மலரடி மெள்ள வாங்கித்

திருவருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.  10

Appar (05.077):

 பூரி யாவரும்

புண்ணியம் பொய்கெடுங்

கூரி தாய

அறிவுகை கூடிடுஞ்

சீரி யார்பயில்

சேறையுட் செந்நெறி

நாரி பாகன்றன்

நாமம் நவிலவே.  1

என்ன மாதவஞ்

செய்தனை நெஞ்சமே

மின்னு வார்சடை

வேதவி ழுப்பொருள்

செந்நெ லார்வயல்

சேறையுட் செந்நெறி

மன்னு சோதிநம்

பால்வந்து வைகவே.  2

பிறப்பு மூப்புப்

பெரும்பசி வான்பிணி

இறப்பு நீங்கியிங்

கின்பம்வந் தெய்திடுஞ்

சிறப்பர் சேறையுட்

செந்நெறி யான்கழல்

மறப்ப தின்றி

மனத்தினுள் வைக்கவே.  3

மாடு தேடி

மயக்கினில் வீழ்ந்துநீர்

ஓடி யெய்த்தும்

பயனிலை ஊமர்காள்

சேடர் வாழ்சேறைச்

செந்நெறி மேவிய

ஆட லான்றன்

அடியடைந் துய்ம்மினே.  4

எண்ணி நாளும்

எரியயிற் கூற்றுவன்

துண்ணென் றோன்றிற்

றுரக்கும் வழிகண்டேன்

திண்ணன் சேறைத்

திருச்செந் நெறியுறை

அண்ண லாருளர்

அஞ்சுவ தென்னுக்கே.  5

தப்பில் வானந்

தரணிகம் பிக்கிலென்

ஒப்பில் வேந்தர்

ஒருங்குடன் சீறிலென்

செப்ப மாஞ்சேறைச்

செந்நெறி மேவிய

அப்ப னாருளர்

அஞ்சுவ தென்னுக்கே.  6

வைத்த மாடும்

மடந்தைநல் லார்களும்

ஒத்தொவ் வாதவுற்

றார்களு மென்செய்வார்

சித்தர் சேறைத்

திருச்செந் நெறியுறை

அத்தர் தாமுளர்

அஞ்சுவ தென்னுக்கே.  7

குலங்க ளென்செய்வ

குற்றங்க ளென்செய்வ

துலங்கி நீநின்று

சோர்ந்திடல் நெஞ்சமே

இலங்கு சேறையிற்

செந்நெறி மேவிய

அலங்க னாருளர்

அஞ்சுவ தென்னுக்கே.  8

பழகி னால்வரும்

பண்டுள சுற்றமும்

விழவி டாவிடில்

வேண்டிய எய்தொணா

திகழ்கொள் சேறையிற்

செந்நெறி மேவிய

அழக னாருளர்

அஞ்சுவ தென்னுக்கே.  9

பொருந்து நீண்மலை

யைப்பிடித் தேந்தினான்

வருந்த வூன்றி

மலரடி வாங்கினான்

திருந்து சேறையிற்

செந்நெறி மேவியங்

கிருந்த சோதியென்

பார்க்கிட ரில்லையே.