Tuesday, October 19, 2021

Udhvaganathar Temple, Thirumanancheri – Appar Hymns

Udhvaganathar Temple, Thirumanancheri – Appar Hymns

05.087:

பட்ட நெற்றியர்

பாய்புலித் தோலினர்

நட்ட நின்று

நவில்பவர் நாடொறுஞ்

சிட்டர் வாழ்திரு

வார்மணஞ் சேரியெம்

வட்ட வார்சடை

யார்வண்ணம் வாழ்த்துமே.  1

துன்னு வார்குழ

லாளுமை யாளொடும்

பின்னு வார்சடை

மேற்பிறை வைத்தவர்

மன்னு வார்மணஞ்

சேரி மருந்தினை

உன்னு வார்வினை

யாயின ஓயுமே.  2

புற்றி லாடர

வாட்டும் புனிதனார்

தெற்றி னார்புரந்

தீயெழச் செற்றவர்

சுற்றி னார்மதில்

சூழ்மணஞ் சேரியார்

பற்றி னாரவர்

பற்றவர் காண்மினே.  3

மத்த மும்மதி

யும்வளர் செஞ்சடை

முத்தர் முக்குணர்

மூசர வம்மணி

சித்தர் தீவணர்

சீர்மணஞ் சேரியெம்

வித்தர் தாம்விருப்

பாரை விருப்பரே.  4

துள்ளு மான்மறி

தூமழு வாளினர்

வெள்ள நீர்கரந்

தார்சடை மேலவர்

அள்ள லார்வயல்

சூழ்மணஞ் சேரியெம்

வள்ள லார்கழல்

வாழ்த்தவாழ் வாவதே.  5

நீர்ப ரந்த

நிமிர்புன் சடையின்மேல்

ஊர்ப ரந்த

உரகம் அணிபவர்

சீர்ப ரந்த

திருமணஞ் சேரியார்

ஏர்ப ரந்தங்

கிலங்குசூ லத்தரே.  6

சுண்ணத் தர்சுடு

நீறுகந் தாடலார்

விண்ணத் தம்மதி

சூடிய வேதியர்

மண்ணத் தம்முழ

வார்மணஞ் சேரியார்

வண்ணத் தம்முலை

யாளுமை வண்ணரே.  7

துன்ன வாடையர்

தூமழு வாளினர்

பின்னு செஞ்சடை

மேற்பிறை வைத்தவர்

மன்னு வார்பொழில்

சூழ்மணஞ் சேரியெம்

மன்ன னார்கழ

லேதொழ வாய்க்குமே.  8

சித்தர் தேவர்கள்

மாலொடு நான்முகன்

புத்தர் தேரமண்

கையர் புகழவே

மத்தர் தாமறி

யார்மணஞ் சேரியெம்

அத்த னாரடி

யார்க்கல்ல லில்லையே.  9

கடுத்த மேனி

அரக்கன் கயிலையை

எடுத்த வனெடு

நீண்முடி பத்திறப்

படுத்த லுமணஞ்

சேரி யருளெனக்

கொடுத்த னன்கொற்ற

வாளொடு நாமமே.