Tuesday, June 20, 2017

Ponvaithanathar Temple, Chithaaimur – Literary Mention

Ponvaithanathar Temple, Chithaaimur – Literary Mention
Tirugnanasambandar has sung hymns in praise of Lord Shiva of this temple. This is the 223rd Devaram Paadal Petra Shiva Sthalam and 206th Sthalam on the south side of river Cauvery in Chozha Nadu.
Thirumurai 3.42 திருச்சிற்றேமம்
பாடல் எண்: 1 பண் : கொல்லிக்கௌவாணம்

நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலா மேத்தநின்ற பெருமானே.

மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ ராடன்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேம மேவினான்
ஆகத்தேர்கொ ளாமையைப் பூண்டவண்ண லல்லனே.

நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவு ளல்லனே.

கதிரார் திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ ராடன்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை எழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்க ணேறுடை யாதிமூர்த்தி யல்லனே.

வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதொடும் மகிழ்ந்தமைந்த னல்லனே.

பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத் தாமம்சூழ்சிற் றேமத்தான்
முனிவு மூப்புநீக்கிய முக்கண்மூர்த்தி யல்லனே.

கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ ராடன்மேய மாதவன்
தளிருங்கொம்பு மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூன் மார்பனென் உள்ளத்துள்ளான் அல்லனே.

சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ ராடன்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் றடவரையைத்தன் றாளினால்
ஆழ்ந்தவரக்க னொல்கவன் றடர்த்தவண்ண லல்லனே.

தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தா னலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வ னல்லனே.

வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடன்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தா னுருவார்புத்த ரொப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.

கல்லிலோத மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலுஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவா ரல்லலின்றி வாழ்வரே.