Yathothkari Perumal Temple,
Kanchipuram – Literary Mention
The temple finds mention in Mahabharata, Tholkappiam (3rd
century BCE) and Perumpaanaattruppadai composed by Uruttiran Kannanar (2nd
century CE). The temple also finds mention in Silapathikaram, ancient Tamil
epic (2nd century CE). The temple is revered in Nalayira Divya
Prabandham, the 7th – 9th century Vaishnava canon,
by Nammazhvar, Poigai Azhwar, Peyalvar, Thirumazhisai Azhwar and
Thirumangai Azhwar. Hence, this temple is considered as one among the 108 Divya Desams. This temple is considered as the avathara sthalam of Poigai Azhwar. Many acharyas have
also written songs in praise of Lord Vishnu of this temple.
Thirumazhisai
Azhwar:
814:
நன்றிருந்துயோகநீதி நண்ணுவார்கள்சிந்தையுள் *
சென்றிருந்துதீவினைகள் தீர்த்ததேவதேவனே! *
குன்றிருந்தமாடநீடு பாடகத்துஊரகத்தும் *
நின்றிருந்து, வெஃகணைக்கிடந்தது என்னநீர்மையே?
815:
நின்றதெந்தையூரகத்து இருந்ததெந்தைபாடகத்து *
அன்றுவெஃக ணைக்கிடந்தது என்னிலாதமுன்னெலாம் *
அன்றுநான்பிறந்திலேன் பிறந்தபின்மறந்திலேன் *
நின்றதும்இருந்ததும் கிடந்ததும்என்நெஞ்சுளே.
2417:
நாகத்தணைக்குடந்தை வெஃகாதிருவெவ்வுள் *
நாகத்தணையரங்கம் பேரன்பில் * - நாகத்
தணைப்பாற்கடல்கிடக்கும் ஆதிநெடுமால் *
அணைப்பார்கருத்தனாவான்.
Thirumangai
Ahwar:
1854:
கூந்தலார்மகிழ் கோவலனாய் * வெண்ணெய்
மாந்தழுந்தையில் கண்டுமகிழ்ந்துபோய் *
பாந்தள்பாழியில் பள்ளிவிரும்பிய *
வேந்தனைச்சென்றுகாண்டும் வெஃகாவுளே.
2059:
நீரகத்தாய் நெடுவரையி னுச்சிமேலாய்!
நிலாத்திங்கள்துண்டகத்தாய்! நிறைந்தகச்சி
ஊரகத்தாய்! * ஒண்துரைநீர்வெஃகாவுள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய்! * உலகமேத்தும்
காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!
காமருபூங்காவிரியின்தென்பால்மன்னு
பேரகத்தாய்! * பேராதுஎன்நெஞ்சினுள்ளாய்!
பெருமான்உன்திருவடியேபேணினேனே. (2)
2064:
கல்லெடுத்துக்கல்மாரிகாத்தாய்! என்றும்
காமருபூங்கச்சியூரகத்தாய் என்றும் *
வில்லிறுத்துமெல்லியல்தோள்தோய்ந்தாய்! என்றும்
வெஃகாவில்துயிலமர்ந்தவேந்தே! என்றும் *
மல்லடர்த்துமல்லரைஅன்றுஅட்டாய்! என்றும் *
மாகீண்டகைத்தலத்துஎன்மைந்தா! என்றும் *
சொல்லெடுத்துத்தன்கிளியைச்சொல்லேயென்று
துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே.
2065:
முளைக்கதிரைக்குறுங்குடியுள்முகிலை மூவா
மூவுலகும்கடந்துஅப்பால்முதலாய்நின்ற *
அளப்பரியஆரமுதை அரங்கம்மேய
அந்தணனை அந்தணர்தம்சிந்தையானை *
விளக்கொளியைமரகதத்தைத்திருத்தண்காவில்
வெஃகாவில்திருமாலைப்பாடக்கேட்டு *
வளர்த்ததனால்பயன்பெற்றேன்வருகவென்று
மடக்கிளியைக்கைகூப்பிவங்கினாளே. (2)
2673.70:
லூரே * - மதிட்கச்சியூரகமே பேரகமே *
பேராமருதிறுத்தான் வெள்ளறையேவெஃகாவே *
2674.127:
மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை *
மன்னியபாடகத்து எம்மைந்தனை * - வெஃகாவில் *
Poigai
Azhwar:
2158:
வேங்கடமும் விண்ணகரும்வெஃகாவும் * அஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல்பொன்னகரும் * - நான்கிடத்தும்
நின்றான்இருந்தான் கிடந்தான்நடந்தானே *
என்றால்கெடுமாம் இடர்.
Pey
Azhwar:
2307:
சிறந்தவென்சிந்தையும் செங்கணரவும் *
நிறைந்தசீர்நீள்கச்சியுள்ளும் * - உறைந்ததும்
வேங்கடமும்வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே *
தாங்கடவார்தண்துழாயார்.
2343:
விண்ணகரம்வெஃகா விரிதிரைநீர்வேங்கடம் *
மண்ணகரம்மாமாடவேளுக்கை * மண்ணகத்த
தென்குடந்தை தேனார்திருவரங்கம்தென்கோட்டி *
தன்குடங்கைநீரேற்றான்தாழ்வு.
2345:
இசைந்தஅரவமும் வெற்பும்கடலும் *
பசைந்தங்கமுது படுப்ப * - அசைந்து
கடைந்தவருத்தமோ? கச்சிவெஃகாவில் *
கிடந்திருந்துநின்றதுவுமங்கு.
2357:
பொருப்பிடையேநின்றும் புனல்குளித்தும் * ஐந்து
நெருப்பிடையேநிற்கவும்நீர்வேண்டா * - விருப்புடைய
வெஃகாவேசேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க்கை தொழுதால் *
அஃகாவேதீவினைகளாய்ந்து.
Nammazhvar:
2503:
நானிலம்வாய்க்கொண்டு நன்னீரறமென்றுகோது கொண்ட *
வேனிலஞ்செல்வன்சுவைத்துமிழ்பாலை * கடந்தபொன்னே!
கால்நிலந்தோய்ந்துவிண்ணோர்தொழும்கண்ணன் வெஃகாவுது அம்பூந்
தேனிளஞ்சோலையப்பாலது * எப்பாலைக்கும்சேமத்ததே.